உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

105

தான்

41. ஒரு வணிகனும் குறளியும்

6

அவா

வணிகம் செய்து பெரும்பொருள் தொகுத்த ஒரு வணிகன், தொகுத்த அப்பெரும்பொருளளவில் அடங்கப்பெறானாய், மேலும்மேலும் இன்னும் பொருள் திரட்டுதற்கு வழி யாது? என்று அல்லும்பகலும் எண்ணிக் குறிசொல்வாரையும் மந்திரக்காரரையும் வினவி வந்தனன். தான் பெரும்பொருள் திரட்டிக் கொள்வதற்கு வழிகாட்டு L பவனாகத் தன்னால் கருதப்பட்ட எந்தக் குறிகாரனைக் கண்டாலும், எந்த மந்திரக்காரனைக் கண்டாலும் செம்பைப் பொன்னாக்கும் எந்த இரசவாதியைக் கண்டாலும் அவர் கட்கெல்லாம் தனது பொருளை வாரிவாரிக் கொடுத்து வந்தான். அங்ஙனம் தன் பொருளையெல்லாம் அவர்கட் காகச் செலவழித்து வந்தனனே அல்லாமலே, அவர்களால் ஓர் இம்மி அளவு பொன்னாவது இயற்கைக்கு மாறாகப் பெறும் வழி ஏதும் தெரிந்தானில்லை. தொடர்பாகத் தன் பொரு ளெல்லாம் இங்ஙன் தொலைந்து போவதை இவன் தன் கண்ணெதிரே கண்டு வைத்தும் தக்கதல்லா வழியில் பொன் பெறுதற்குத் தான்கொண்ட பேரவாவை இவன் சிறிதும் விட்டானில்லை.

கடை சியாக இவனிடம் வந்த ஒரு மந்திரக்காரன் குறளியை அழைத்து ஏவல்கொள்ளும் மந்திர முறை தனக்குத் தெரியுமென்றும், அதனை வசப்படுத்திக் காண்டால் அதன் உதவியால் திரள்திரளாகப் பொன் பெறலாமென்றும் கூறித் தான் கூறியதை மெய்ப்படுத்தப் பலவகைப் பழங்களும், உணவுப் பண்டங்களும் இடை வெளியினின்றும் வருவித்துக் காட்டி, அவ்வணிகனுக்கு மிக்கதோர் இறும்பூதினை உண்ட ாக்கினான். தான் பாடு பட்டுத் தேடிய பெரும் பொருளையெல்லாம் நாளடைவில் இவ்வழியே தொலைத்து விட்ட அவ்வணிகன், இனித்தான் தனக்கு நல்லகாலம் வரப்போகின்றது எனக் கருதி, மிச்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/138&oldid=1584752" இலிருந்து மீள்விக்கப்பட்டது