உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

  • மறைமலையம் -18

மிருந்த பொருளையும் அம்மந்திரக்காரனுக்குக் கொடுத்துக் குறளியை அழைக்கும் மந்திரத்தை அவனிடமிருந்து கற்றுக் கொண்டான்.

அவன் அதனைக் கற்று உருவேற்றவே குறளிப்பேய் அவனிடம் போந்து, இறைச்சியும் இரத்தகாவும் தான் வேண்டும் போதெல்லாம் தனக்குக் கொடுத்தால் அவன் ஏவியது செய்யலாம் என்றது. அங்ஙனம் அவன் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் ஊனும் குருதியும் மிகுவிலைகொடுத்து வாங்கி அக்குறளிக்குச் சிலநாட்கள் வரையில் காவுகொடுத்து வந்தான். அவன் தனக்கு வேண்டிய பண்டங்களைக் கொணர்ந்து தரும்படி அப்பேயைக் கேட்ட காலங்களிலெல்லாம், அஃது அப்பண்டங்களின் விலையைக் கொடுத்தால் அல்லாமல் அவைகளைக் கொண்டுவருதல் தன்னால் இயலாதென்றது. அதன்மேல் அவன் அப்பண்டங்களின் விலையைச் சிலமுறை கொடுக்க அஃது அவ்விலைப் பொருளை அப்பண்டங்கட்கு உரியவன்பால் சேர்ப்பித்து, அப்பண்டங்களை ஒரு நொடிப் பொழுதில் எலாங்கொணர்ந்து இவனிடம் சேர்ப்பித்தது. இதனைக்கண்ட அவ்வணிகன், ஒரு வேலைக்காரன் செய்யும் வேலையை விரைந்து அஃது ஒரு புதுமையான வகையில் செய்யும் அவ்வளவேயன்றி, அதனால் வேறு ஏதொரு பயனும் உண்டாகாமையும், ஒரு வேலைக்காரனுக்குக் கொடுக்கும் சம்பளத்திலும் பதின்மடங்கு மிகுதியான பொருள் அக் குறளிக்கு அடுத்தடுத்து வேண்டும் ஊனுக்கும் குருதிக்கும் கள்ளுக்கும் செலவாகுதலையும் கண்டு மிகவும் கவலை காள்வானானான். பலநாள் இங்ஙனம் வருந்திப் பின்னர் ஒருநாள் அக்குறளிக்கு வேண்டும் உணவு கொடுத்துத், தனக்குப் பெரும்பொருள் கொணர்ந்து தரும்படி அதனை வேண்டினான். அதற்கு அக்குறளி, பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து கொடுத்தல் ஆவியுலகில் உலவும் எந்த உயிர்க்கும் இயலா தன்றும், ஆனாலும் இம்மண்ணுலகில் உயிரோடிருந்த காலத்தில் தான் தேடிக் குவித்த பெரும்பொருளை நிலத்தின்கீழ் புதைத்து வைத்து மாண்டுபோன ஒருவனது ஆவி அப் புதையலை எவரும் எடாதபடி காத்து நிற்கின்றதாகலின் அதனை வேண்டினால் அஃது அப்பொருளைத் தரக்கூடு மென்றும் நுவன்று அவ்ஆவியையும் அவன்பால் அழைத்து வந்துவிட்டது. பொருள் அவாவினால் பிடியுண்ட அவ்வாவி

ல 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/139&oldid=1584753" இலிருந்து மீள்விக்கப்பட்டது