உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

107

பெருங்கவலையும், பெருந்துன்பமும் உடையதாய்ப் பார்ப்ப தற்குப் பேரச்சத்தை விளைவிக்கும் இருண்ட கொடிய உருவுடன் அவன் முன்னே நள்ளிரவில் தோன்றி அலறலாயிற்று. அதனைக் கண்டதும் பெருந்திகில் கொண்ட அவ்வணிகன் தன் இருகண் களையும் மூடிக்கொண்டு அசைவற்ற மரம்போல் இருந்தனன். அதுகண்ட குறளி “யான் அழைத்து வந்த அவ்ஆவிக்கு நின் கருத்தை அறிவித்து அது வேண்டியது செய்யாவிட்டால் நினக்கு அது தீது செய்யும்” என்று உரைக்க, அவன் ஒருவாறு மனந்தேறி, "நீ வைத்திருக்கும் புதையலை எனக்குத் தருவையோ?' என வினவினான். அச்சொற் கேட்டதும் அது மிகவும் சினம் கொண்டு அலறி, “கருக்கொண்ட ஓர் அழகிய மங்கையை யான் புதையல் வைத்திருக்கும் இடத்தில் காணர்ந்து வெட்டிக் காவு கொடுத்தால், அதனை நீ எடுத்துக் கொள்ள விடுவேன்” என்று சொல்லி மறைந்து போயிற்று.

அச்சொற் கேட்ட பொருட்பேயனான அவ்வணிகன் தனக்குப் பெரும்புதையல் கிடைக்கப் போவதை எண்ணிப் பெருமகிழ்ச்சியும், ஆனால் அதற்காகக் காவு கொடுக்கும் பொருட்டுக் கருக்கொண்ட அழகிய ஒரு மங்கையை எங்ஙனம் தேடிப்பிடிப்பது என்பதை நினைத்துப்

6

பரும்

கவலையும் கொண்டவனாய் அதைப் பற்றிப் பேசும் பொருட்டு, உறங்கிக் கிடக்கும் தன் அழகிய மனையாளை எழுப்பினான். அவள் திடுமென அச்சத்துடன் எழுந்து யாது செய்தி? என வினவச், சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்த அந்நிகழ்ச்சியைச் சொல்லிக், கருக்கொண்ட அழகிய பெண் ஒருத்தியை எங்கே எப்படிப் பெறலாம் என அவளைக் கேட்டான். அந்நிகழ்ச்சியைக் கேட்ட அம்மாது பெருந்திகில் காண்டவளாய்த், தன் கணவன் தான் பாடுபட்டுத் தேடிய பெரும்பொருளை எல்லாம் தனக்குள்ள பேரவாவினால் தொலைத்துவிட்டு வறுமைப்படுதலையும், மீண்டும்

பா

ருள் ள் பெறும் பொருட்டுத் தகாத வழியில் அவன் முயலுதலையும், தான் அழகில் மிக்கவளாய் சூல்கொண்ட வயிற்றினளாய் இருத்தலையும் நினைத்துக், கருக்கொண்ட வேறு ஓர் அழகிய மாது கிடைத்திலளாயின் தன் கணவன் தன்னையே வெட்டிக் காவு கொடுக்கப் பின் வாங்கானென நடுங்கினாள். அந்நடுக்கத்தை உணர்ந்த அவன் அவளுக்கு அது நீங்குமாறு ஆறுதல் சொல்லி, எங்காயினும் ஓர் ஏழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/140&oldid=1584754" இலிருந்து மீள்விக்கப்பட்டது