உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

  • மறைமலையம் -18

பெண்ணைத் தேடிப் பிடித்து அவளால் தான் கொண்ட கருத்தை முடித்துக் கொள்வதாக உறுதிமொழி புகன்றான். ஆனால், உண்மையில் அவன் மனையாள் எண்ணியபடி அவளையே அப்பேய் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் வெட்டிக் காவு கொடுத்து அப்புதையலை எடுத்துக்

கொள்ளவே தனக்குள் தீர்மானம் செய்தான். பிறகு சிலநாட்

சன்றன. சென்றபின் ஒருநாளிரவு தன் மனையாளை அழைத்துச் சூல்கொண்ட அழகிய ஓர் ஏழைப் பறைப் பெண் தனக்குக் கிடைத்திருக்கின்றனள் என்றும், அவளை இந்நள்ளிரவில் கொண்டுபோய்க் குறிப்பிட்ட இடத்திற் காவு கொடுத்தவுடனே னே கிை கிடைக்கும் பொற்றிரளைப் பிறர் அறியாமல் வீட்டிற் கொணர்ந்து சேர்ப்பித்தற்கு நீயும் என்னுடன் வந்து உதவிசெய்ய வேண்டு மென்றும் அவளைக் கெஞ்சிக் கேட்டுத் தன்னுடன் வரும்படி வேண்டினான். பறைப்பெண் கிடைத்தனள் என்பது பொய் மொழியே என்றும், தன்னையே தன் கணவன் அங்ஙனம் காவு கொடுக்கப் போகின்றனன் என்றும் அவன் மனையாள் உள்ளுணர்ந்து கலங்கினளாயினும், அவன் சொல்லுக்கு மாறுசொல்ல வகையறியாளாய்த், தெய்வம் விட்டபடி ஆகுக என்று மனந்துணிந்து, அந்நள்ளிரவில் அவனுடன் அவன் குறிப்பிட்ட இடத்திற்குப் போயினாள்.

அவ்விருவரும் போய்ச் சேர்ந்த இடம் இடிந்து பாழாய்க் கிடக்கும் ஒருபெரு வீடு ஆகும். 'அஃது அவர் இருக்கும் ஊருக்கும் ஒரு கல் தொலைவில் நாகதாளிப் புதர்களுக் கிடையே இருந்தது. அதற்கு அருகில் சுற்றி இருப்பை மரத்தோப்பு ஒன்று இருந்தது. அவர்கள் புறப்பட்ட அந்நாள் முன் நிலாக் காலமாதலால், அவர்கள் வீட்டைவிட்டுச் செல்கையிற் சிறிது நிலவொளி காணப்பட்டது. அவர்கள் அவ்இடிந்த வீட்டருகே வந்ததும் நிலவொளி மறைந்து போயது. அப்பாழிடத்தில் இருள் மிகுந்திருந்தமையால் அவ்வணிகன் தன் கையில் கொண்டு சென்ற ஒரு சிறு கண்ணாடி விளக்கை ஏற்றினான். அச்சம் தரும் அவ்விடத்தைச் சுற்றி எத்தகைய மக்களும் இயங்காமல் ஓவென்றிருத்தலையும், தன் கணவனது எண்ணத்தையும் கண்டுணர்ந்த அப்பெண்ணின் துணையற்ற உள்ளநிலை அந்நேரத்தில் எத்தகையதாய் இருக்கும் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/141&oldid=1584755" இலிருந்து மீள்விக்கப்பட்டது