உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

சிறுவர்க்கான செந்தமிழ்

109

நாம் சொல்வதைவிட இதனைப் பயில்வோரே உணர்ந்து பார்த் தல் வேண்டும்! அவள் ஏறக்குறைய உயிரற்ற மரப்பாவையே ஆனாள். தன் கணவனைத் திகிலோடு நோக்கி, “நீங்கள் சொல்லிய பறைப்பெண் எங்கே?” என நாக்குழறிக் கேட்டாள். அதற்கவன், “இதோ சிறிது நேரத்தில் வருவாள்!” என்று சொல்லியபடியாய், தான் கொணர்ந்த ஒரு ட்டகத்தைத் திறந்து, அப்பேய்க்குப் படைத்தற்காகக் கொண்டுவந்த கள்ளும் கருவாடும் புகையிலையும் தென்னம் பாளைப் பூவும் எல்லாம் எடுத்துவைக்கக், கடைசியாகப் பளபளவென மின்னும் கருக்கான ஒரு வெட்டரிவாளையும் எடுத்து வைத்தான். அவன் மனையாளாகிய அவ்வேழைப் பேதை பின்னதைக் கண்டதும் முக்கால்வாசி உயிர் நீங்கிய உடலத்தினளாய் நிலத்திலே அயர்ந்து விழுந்தாள்.

66

இந்நேரத்தில் எவரோ ஒருவர் வரும் அரவம் தென் பட்டது. அஃதுணர்ந்த அவ்வணிகன் தன் நோக்கத்திற்கு இடையூறாக வருவார் எவரென அச்சத்துடன் சுற்றிப் பார்த்தான். அருளொளி ததும்பும் திருமுகமும் நீண்ட சடை முடியும் நீறு துலங்கும் நெற்றியும் உடையராய்க் காவி யாடை பூண்ட ஒரு துறவி தன்பால் விரைந்து வரக்கண்ட ான். கண்ட ஒரு நொடிப் பொழுதில் அவர் அவனை அணுகி “அடா பேதாய்! கருக்கொண்ட அழகிய நின் அருமை மனையாளைப் பாழும் பொருளுக்காக வெட்டிப் பலிகொடுக்கத் துணிந் தனையே! உன்னைப் போல் அறிவில்லாத் தீய கொடிய பாருட்பேய் வேறுண்டோ! நீ நின் மனையாளைப் பலிகொடுத்தவுடனே உன்னை இரண்டு துண்டாய் வெட்டி வீழ்த்தி, நீயெடுத்த புதையலைக் கொண்டு போகக் கொடிய கள்வர் சிலர் இதோ வந்து கொண்டிருக்கின்றனர்! தோ தோன்றும் இருப்பை மரத்திற்போய் ஏறிக்கொள்! தாழாதே! நின் மனையாளை யான் வேறு ஓரிடத்திற் கொண்டு போய் மறைத்துவைத்து, அக்கள்வர் திரும்பிச் சென்றதும் அவளை மீண்டும் நின்பாற் சேர்ப்பிக்கின்றேன்” எனவிரைந்து அரு ளாடு மொழிந்தார். அப்பெரியாரின் அமுதவுரை செவியிற் பட்டதும் போன உயிர் மீளப் பெற்ற அவ்வணிகனின் மனைவி திடுமென எழ அவர் அவளை அழைத்துக் கொண்டு சடுதியில் மறைந்துபோயினார். அவ்வணிகனும் திகில் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/142&oldid=1584756" இலிருந்து மீள்விக்கப்பட்டது