உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

  • மறைமலையம் -18

வனாய் அவ்விடிந்த இல்லத்திற்குச் சிறிது எட்டியிருந்த இலை அடர்ந்த ஓர் இருப்பை மரத்தருகில் விரைந்தோடி அதன் மேல் ஏறிக்கொண்டான்.

அவன் அங்ஙனம் ஏறிக் கொண்ட சில நொடிப்பொழுதி லெல்லாம் நாலைந்து கொடிய கள்வர்கள் கண்டவர் கலங்கத்தக்க கரிய திண்ணிய வடிவினராயும், கூரிய

66

காடுவாள் பிடித்த கையினராயும் விரைந்துபோந்து, அவ்விடிந்த பாழ்வீட்டிலே அவ்வணிகன் விளக்கும் மற்றைப் பொருள்களும் வைத்துப் போன இடத்தில் புகுந்துநின்றனர். அவ்விடத்திற்குச் சிறிது தொலைவிலே இருப்பை மரத்தின் மேல் ஏறியிருந்த அவ்வணிகன், தான் அங்கு வைத்த விளக்கு வெளிச்சத்தின் உதவியால் அக்கள்வர்களையும் அவர்களது இயக்கத்தையும் அதன் அருகில் கண்டு வெருக்கொண்டு, ஐயோ! அருளுடைய அத்துறவியார் சில நொடிப்பொழுது முன் வராதிருந்தால் என் அருமை மனைவியையும் தீவினை யேன் கொன்றிருப்பேன்! அவளைக் கொன்ற சிறிது நேரத்திலெல்லாம் யானும் இக்கொடிய கள்வர்களால் கொல்லப்பட்டிருப்பேன்! என் மனைவியும் யானும் மடிந்த பின் பொருளோ பொருள் என்று அலைந்த எனது தீய அவா எப்படியாம்? பொருள் அவாத் தொலைத்த அத்தூய பெரியவ ராலன்றோ என் மனைவியும் யானும் உயிர் பிழைத்தோம்! யான் தீவினைக்குத் தப்பினேன்! அப்பெரியாரை இந்நேரத்தில் விடுத்த சிவமே நீதான் எமக்குப் பெருஞ்செல்வம்!" என்று நெஞ்சம் நீராய் உருகிக் கண்ணீர் உகுத்தான். அவ்விடத்திற் போந்து நின்ற கள்வர்கள் அன்றிரவு விடியுமட்டும் அங்கிருந்து, அவ்வணிகனையும் அவன் மனைவியையும் காணாமல் அவன் கே கொணர்ந்து வைத்த பொருள்களை மட்டும் கண்டு வியப்புற்றுக் காக்கை கரையக் கேட்டு, அங்கிருந்த விளக்கு, அரிவாள், பெட்டகம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு போய் ஒழிந்தனர்.

அங்கே

கதிரவன் புறத்தே பரவிய இருளைப் பருகி எங்கும் பேரொளி விரியக் கீழ்பால் தளதளவெனத் தோன்றினான். அத்துறவியரும் அவ்வணிகனின் அருமை மனைவியை அழைத்துக் கொண்டு அவனது அகத்தே பரவிய அறியாமை அவா இருளையொழித்து அறிவொளி பரப்புவாராய் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/143&oldid=1584757" இலிருந்து மீள்விக்கப்பட்டது