உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

111

ஏறி இருந்த இருப்பை மரத்தருகே வந்தார். அவரது அருமைத் திருவுருவைக் காண்டலும் அவன் அம்மரத்திலிருந்து கீழிறங்கிப் போந்து அவர் திருவடிகளில் வீழ்ந்து தேம்பித் தேம்பி அழுது, “தீவினையேனைக் காக்கப் போந்த தெய்வப் பெருமானே! தேவரீர் செய்யாமல் செய்த அருளுதவிக்குப் பாவியேன் எங்ஙனம் நன்றி செலுத்த வல்லேன்! எவ்வாறு தேவரீரை வாழ்த்துவேன் வணங்குவேன்! யானும் என் மனைவியும் என் மக்களும் என் வழியுமெல்லாம் தேவரீர் திருவடிக்கே அடிமை!” என்று கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுதழுது உரைத்தான்.

அதுகண்ட அப்பெரியார் “மகனே! நீ உள்ளம் திருந்தி யதற்கு மகிழ்ந்தேன்! உயிர்மீண்ட நின் அருமை மனைவியைத் தழுவிக்கொள்! இந்நல்லாளினும் இவள் வயிற்றில் பிறக்கும் மக்களினும் சிறந்த செல்வம் உனக்கு வேறுளதோ? வளை யும் இவள் இவள் மக்களையும் நின்னையும் ஏழை எளியவர் களையும் கற்றாரையும் துறந்தாரையும் ஓம்புதற்கே செல்வம் வேண்டுமல்லாமல், இவர்களை இழத்தற்கா அது வேண்டும்? நல்லெண்ணமும் நன்முயற்சியும் இருந்தால் உனது வாழ்க்கைக்கு வேண்டுமளவு செல்வமும் சிவத்தினருளால் உனக்குத் தானே திண்ணமாய் வரும்! இனிப் பொருளில் அவா வையாதே! நீ இப்போதிருக்கும் இல்லத்தில் மீண்டும் அக்கள்வர்கள் புகுந்து நின்னைத் துன்புறுத்தக் கூடுமாதலால், நீ அதனைவிட்டு, வேறோர் ஊரில் வேறோர் இல்லிற் குடிபுகுந்து, நின் வாழ்க்கையை அன்புக்கும் அறத்திற்கும் இடமாக நன்கு நடத்து!” எனச் சொல்லிச் சடுதியில் அவனை விட்டு மறைந் தேகினர். அவ்வணிகனும் தன்மனையாளுடன் அவர் கற்பித்த வண்ணமே வேறொர் ஊரில் சென்று வைகி நன்கு வாழ்ந்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/144&oldid=1584758" இலிருந்து மீள்விக்கப்பட்டது