உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 18

42. ஓர் அரசிளம் செல்வியின் வைரமணிகள்

வர

சுவீடன் தேயத்து அரசரின் தங்கையான ஊசினி என்னும் நங்கையார் ஏழை எளியவர்கட்கு ஒரு மருத்துவ விடுதி அமைக்கும் பொருட்டுத், தாம் பூண்டிருந்த மணிகளை விலை விலை செய்வித்துத் தாம் விரும்பியவோே அதனை மிகவும் சீரியதாக அமைப்பித்து வைத்தனர். அங் ஙனம் அதனை அமைப்பித்து அதன்கண் வந்து சேரும் நோயாளிகளுக்கு வேண்டுவனவெல்லாம் செவ்வனே செய்யும்படி ஒழுங்குபடுத்திய பின் ஒருநாள் அவ்வரசிளஞ் செல்வியார் அங்குள்ள ள்ள நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். சென்று ஒரு நோயாளியின் படுக்கை அருகே அவர் நின்று கொண்டிருக்கையில் அதன்கணிருந்த அவன் அந்நங்கையர் செய்த செயற்கரிய அருட்செயலை சயலை எடுத்து மொழிந்து அவரை வணங்கி வாழ்த்தி நெஞ்சம் கரைந்து தன் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் சிந்தினான். அந்நீர்த் துளிகளைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த அச்செல்வியார் “ஆ! இப்போது மறுபடியும் என்னுடைய வைரமணிகளை நான் காண்கின்றேன்" என்று வியந்துரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/145&oldid=1584759" இலிருந்து மீள்விக்கப்பட்டது