உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

193

6. மாமரம்

மா என்னும் சிறந்த மரம், சூடுமிகுந்த இத்தமிழ் நாட்டிலும் இதனையடுத்துள்ள சில நாடுகளிலும், இதற்குக் கிழக்கேயுள்ள கடாரம், மலேயா, சாவகம் முதலான வெவ்விய தேயங்களிலும் மிகுதியாய் வளர்கின்றன. குளிர் மிகுந்த நீலமலை முதலிய விலங்கல்கள் மேலும், பனிப் பெய்யும் ஐரோப்பிய மேல்நாடுகளிலும் இவை பயிராவ தில்லை.

'மாந்தி', 'கோக்கு ', 'மாழை', 'நாளினி’, ‘எகினம்’, முதலிய சொற்கள் மாமரத்தைக் குறிப்பனவான பழைய தமிழ்ச்சொற்களாகும். இவற்றுள், நாளினி, மாழை, எகினம் என்பன புளிமாவினைச் சுட்டுமென்று பிங்கலந்தை நிகண்டு கூறுகின்றது. ‘சூதம்’, ‘ஆமிரம்’, 'சிஞ்சம்’, முதலியன மாமரத்தினை யுணர்த்தும் வடசொற்களாகும்.

பழைய காலந்தொட்டு வளர்ந்தோங்கி நிற்கும் மாமரங்களில் ஒருசாரன தேமாவென்றும், மற்றொரு சாரன புளிமாவென்றும் பகுத்து வழங்கப்பட்டு வரு கின்றன. ஏனென்றாற், காய்முற்றிப் பழுத்த பின் இனிய சுவைதரும் ஒருவகை தேமா வெனப்படுகின்றது; பழுத்த பின்னும் புளிப்பாயிருத்தல்பற்றி மற்றொருவகை புளிமாவெனப்படு கின்றது. பழைய மாங்கனிகளில் நார் இல்லாதவைகளைக் காண்டல் அரிது.

ம்

ஆனால், இந்நாளிலோ, பழைய மாமரத்தின் சிறு கிளைகளில் வேறு மரஞ் செடிகளின் கிளைகளைக் கொணர்ந்து சீவிப் பிணைத்துக்கட்டி எடுத்த ஒட்டுமாஞ் செடிகளை எங்கும் மிகுதியாய்ப் பயிராக்குகின்றார்கள். இவை மூன்று நான்கு ஆண்டுகளிலெல்லாங் காய்த்து நாரில்லாத இனிய பழங்களைத் தருகின்றன. கொட்டை மாங்கனிகளைவிட

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/225&oldid=1585184" இலிருந்து மீள்விக்கப்பட்டது