உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் - 18

ஒட்டுமாங்கனிகள் அளவிற் பெரியனவாய்த் தீஞ்சுவையில் மிகுந்தனவாய் இருக்கின்றன. கொட்டை மாங்கனிகள் பெரும்பாலனவற்றில் நாரும் புளிப்பும் இருத்தலால் அவற்றைச் சிறுக உண்டாலும் அவை உடம்பின் நலத்தைப் பழுதுபடுத்துகின்றன. ஒட்டுமாங்கனிகளிலோ நாரும் புளிப்பும் இல்லாமல் உள்ளுள்ள தசை சுளை சுளையாக இருத்தலாலுந், தித்திப்பான சாறு நிரம்பியிருத்தலாலும் அவையிற்றைச் சிறிது மிகுதியாக உட்கொண் லும் உடம்பின் நலம் பழுதுறாது; அளவாயுண்டால் உடம்பின்நலம் பெருகும். என்றாலும், ஒட்டுமாங்கனிகளிற் சில புளிப்பாயிருத்தல் ஏன் என்றாற், கடைக்காரர்கள் மரங்களில் நன்றாய் முற்றுதற்கு முன்னமே அவை தம்மைப் பறித்து விற்பனை செய்யக் கொணர் கின்றனர். அதனால் அவை யங்ஙனம் புளிப்பா யிருக்கின்றன. மரங்களில் நன்றாக முற்றும்மட்டும் விட்டுவைத்துப், பின்னர்ப் பறித்துப் பழுக்கவைத்த ஒட்டுமாம்பழங்கள் தீஞ்சுவை பயப்பனவா யிருத்தலை எமது தோட்டத்திலுள்ள ஒட்டு மாமரங்களில் வைத்தே நன்கறிந்திருக்கின்றேம். ஆனால் மரங்களில் அவை செவ்வனே முற்றும்முட்டும் அவை யிற்றை விட்டு வைப்பதற்குச் சில இடையூறுகள் இருக்கின்றன. பகற் காலத்தில் அணிற்பிள்ளைகளும், இராக்காலத்திற் பழந் தின்னி வெளவால்களும் பகலிராக்காலங்களிற் சிறுவர்கள் கள்வர்களும் புகுந்து அவையிற்றைக் கடித்துத் தின்றுங் கவர்ந்து கொண்டும் போய்விடுதலால், அவை முதிர்ந்து செங்காய் ஆகுதற்கு முன்னமே தோட்டக்காரர்கள் அவையிற்றைப்

பறித்துவிடுகின்றார்கள்.

ஆராத்

ஒட்டுமாமரங்களில் ‘நடுச்சாலை' என்னும் வகை மிகுந்த மணமும் நிறைந்த சுவையும் உடையன. 'மல்கோவா' என்னும் வகை அத்துணை மணம் இல்லாவிடினும், இன்சுவையில் மிக்கனவாய், அளவிலும் ஒரு தேங்காய்ப் பருமன் பெருக்கின்றன. ‘கிளிமூக்கு' என்னும் வகையில் மணம் மிகக் குறைவு; சுவையில் மூன்றாந்திறமே. 'நீலம்' என்னும் வகையிற் சேர்ந்த ஒட்டு மாம்பழங்கள் நன்றாய் முற்றியபின்னும் பச்சென்ற தோலுடைய வாய்க் காணப்படுகின்றன; ஆனாலும், உள்ளுள்ள தசை சிவந்த மஞ்சள் நிறம் வாய்ந்து தேனூறித் தித்திக்கின்றன. இந்நான்கு வகைகளைத் தவிர, இன்னும் எத்தனையோ வகையான

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/226&oldid=1585193" இலிருந்து மீள்விக்கப்பட்டது