உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

195

ஒட்டுமாமரங்கள் உண்டு. இங்ஙனமே கொட்டை மாமரங் களிலும் பற்பல வகைகள் உண்டு.

உண்

இனி, இஞ்ஞான்று இத்தென்னாட்டிற் பலவிடங்களிற் பருத்தடர்ந்து காணப்படும் மாந்தோப்புகளில் உள்ள பெரிய பெரிய மரங்களெல்லாங் கொட்டைகளிலிருந்து L டானவைகளே யாகும். இக்கொட்டைமாமரங்களில் ஐந் நூறாண்டு ஆயிர ஆண்டுகளுக்குமேல் உயிருடன் நிற்கும் மரங்களும் உண்டு. இம்மரங்களின் அடிகண் மேலுள்ள பட்டைகள் பொரிந்த வடிவுடையனவாய் இருத்தலால் இவை தம்மைப் 'பொரியரைமா' என்று பழைய தமிழ்நூற் செய்யுட் கள் அடுத்தடுத்து வழங்காநிற்கும் . இம்மாமரங்கள் பெரும் பாலும் பட்டிக்காடுகளுக்குப் பக்கத்தே ஒரு தொகுப்பாக வைத்துப் பழைய நாட்களிலேயே பயிராக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு தொகுப்பாக வைக்கப்பட்ட மரச்செறிவே 'தோப்பு' என வழங்கப் படலாயிற்று. தொகுப்பு என்னுஞ் சொல்லே தோப்பு எனத் திரிபுற்றது.

இப்பழைய கொட்டை மாமரங்கள் பருத்துயர்ந்து, பரியபரிய கோடுகளையுங் கொம்புகளையும் வளார்களை யும் அவற்றில் இலைகளையும் நாற்புறங்களிலும் பரப்பி அடர்ந்து வானளாவி நிற்குந் தோப்புகளின் காட்சியானது காண்பார் கண்களுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சியையும் ஆறுதலையுந் தருகின்றனவன்றோ? வெப்பம் மிகுந்த வேனிற் காலத்தில் ஊர்ப்புறத்தே சென்று, இத்தோப்புகளின் ஊடுநுழைந்து வெயிலேபடாத அம்மர நீழல்களில் வைகி இளைப்பாறுவதினும் மிக்கதோரின்பம் பிறிதுண்டோ? வேனிற்காலத்திற்கு முன்னுஞ் சில இடங்களில் வேனிற் காலத்துவக்கத்தும் மாமரங்கள் பூவெடுத்தலால், அப்போது அப்பூக்ளின் நறுமணத்தில் அளைந்து வந்து சில்லென்று வீசும் மெல்லிய தென்றற்காற்று நம்முடம்பின்மேற் படுங்கால் ஆ அது நமக்கு எவ்வளவு இன்பத்தைத் தருகின்றது!

மற்றைப்பறவைகளைப்போல் எளிதிற் காணப்படுவ தில்லாத குயிற்பறவைகள் வேனிற்காலத்தில் மாமரங்களில் அமர்ந்து கூவும் ஓசை கேட்கக்கேட்க இனியதா யிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/227&oldid=1585201" இலிருந்து மீள்விக்கப்பட்டது