உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

  • மறைமலையம் -18

பெரும்பாலும் மக்கள் வழங்காத ஊர்ப்புறத் தோப்புகளி லிருந்தே குயில்கள் கூவுதலால், தனித்த அவ்விடங்களிற் சென்று அவை கூவும் அவ் வின்னோசையைக் கேட்பது பின்னும் அவ்வினிமையை மிகுதிப்படுத்துகின்றது. ஆனாலுந், தங் காதலரைப் பிரிந்து, அவரது பிரிவை ஆற்றாது வருந்தும் மகளிர்க்கு குயில்கூவும் ஓசை அவரது வருத்தத்தைப் பெருகுவிக்குமென்று நல்விசைப் புலவர்கள் பாடியிருக்கின் றனர். அரசனும் புலவனுமான ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்பான் தான் பாடிய செய்யுள் ஒன்றில்,

“மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் பருநா விளியா னடுநின்று அல்கலும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ, இனச்சிதர் உகுத்த இலவத் தாங்கட் சினைப்பூங் கோங்கின் நுண்டாது பகர்நர் பவளச் செப்பிற் பொன்சொரிந் தன்ன இகழுநர் இகழா இளநாள் அமையஞ் செய்தோர் மன்ற குறியென நீ நின் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப வாரா மையிற் புலந்த நெஞ்சமொடு

நோவல் குறுமகள்

(அகநானூறு 25)

எனத், தன் கொழுநனைப் பிரிந்தவேனிற்காலத்திற் குயிலிசை கேட்டு வருந்தும் ஒரு நங்கைக்கு அவடன்றோழி ஆறுதன் மொழி பகர்தலை எடுத்துக் காட்டி யிருக்கின்றார்.

இனி, ஐப்பசித் திங்களிற் பூவெடுக்கும் ஒட்டுமா மரங்கள் பிஞ்சுபிடித்துக் காய்த்துச் சித்திரைத் திங்களிலே யிருந்து

பழ

ங்களைத் தருகின்றன. கார்த்திகைத் திங்களிற் பூத்துக் காய்க்கும் மரங்களோ வைகாசி அல்லது ஆனி முதற் பழுத்து நறுஞ்சுவைக் கனிகளைத் தருகின்றன. இவ்வொட்டு மாமரங்கட் பூத்திருக்குங்கால் அவற்றிலிருந்து சிலநாட்கள் வரையில் வருங் குளிர்ந்த மணமானது உளத்திற்கு அமைதியான இன்பத்தை ஊட்டுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/228&oldid=1585210" இலிருந்து மீள்விக்கப்பட்டது