உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

197

ஒட்டுமாமரங்களின் தீஞ்சுவையினை அறிந்தவர்கள், வாழை, பலா, நாரத்தை, மாதுளை, விளா முதலான ஏனை எல்லா மரங்களின் கனிகளைவிட இவற்றையே மிகவும் விழைந்து பாராட்டுகின்றார்கள். உண்மையாகவே ஒட்டு மாங்கனிகளின் சுவை வேறெவ்வகைக் கனிகளுக்கும் இல்லை. ஆதலினாற்றான், குளிர் மிகுந்த ஐரோப்பா தேயத்திலுள்ள வெள்ளைக்காரர்கள் மிகுந்த விலைகொடுத்து ஒட்டுமாங்கனி களைத் தம்மூர்களுக்கு வருவிக்கின்றனர். சில காலங்களில் ஓர் ஒட்டுமாங்கனிக்குப் பதினைந்து ரூபாவரையில் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று கல்வியிற் சிறந்த ஒரு துரைமகன் எழுதியிருக்கின்றார். இவ்விந்தய நாட்டுக்கு மிகவுஞ் சேயவான தேயங்களுக்கு இவ்வொட்டு மாம்பழங்களைக் காண்டு செல்ல வேண்டுப வர்கள், சாடிகளில் தேனை நிரப்பி அத்தேனில் அப்பழங் களை அமிழ்த்தி வைத்துக்கொண்டு ள போகின்றார்கள். இவ்விந்திய நாட்டிலுள்ள பெருஞ்செல்வர் களிற் சிலரும் ஒட்டுமாங்கனிகளிற்றமக்கு ஆராவேட்கை இருத்தலால், அவை கிடைப்பதில்லா மற்றைப் பருவகாலங் களிலும் அவற்றை யுண்டு இன்புறுதற்பொருட்டு, அங்ஙனமே அவற்றைத் தேன் நிறைத்த சாடிகளில் இட்டுவைத்துத், தாம் வேண்டுங்காலங்களில் எடுத்து அருந்துகின்றார்கள். முறைப் படி யெடுத்துவைத்த தூய தேனில் எத்தகைய பச்சைப் பண்டங்களை இட்டுவைத்தாலும் அவை நெடுநாள் வரையிற் கெடாமல், இட்டக்கால் இருந்த பதப்படியே யிருக்குமென்று அங்ஙனஞ் செய்து பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக் கின்றேம்.

இனி, ஒட்டுமாம்பழங்களை விரும்பி அடுத்தடுத்து உண்பவர்கள் உடல்நலங்கெடாமைப்பொருட்டு, அவற்றை உண்டபின் காய்ச்சிய ஆவின்பாலைப் பருகுதல் வேண்டும். ஆனாலும், இவைதம்மைச் செரிக்கும் அளவறிந்து உட் கொள்பவர்கள் செழுமையான இரத்தம் ஊறப்பெற்று உடல்நல மனநலங்கள் வாய்ந்து திகழ்வர். அளவுக்குமேல் அவாவை அடக்காமல் அவையிற்றை உண்பவர்கள் வயிற்று நோய் வயிற்றுக்கழிச்சலால் வருந்துவர். அமிழ்தமே யானாலும் அளவறிந்துண்” “அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்” என்னும் பழமொழிகள் நமதுடம்பின் நலத்திற்கு

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/229&oldid=1585218" இலிருந்து மீள்விக்கப்பட்டது