உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் -18

வேண்டுவ வறிந்துரைக்கும் உண்மைப் பொன் மொழி களாகவே விளங்குகின்றன.

இனிக், கொட்டை மமரங்கள் நார் உள்ளவைகளாயிருப் பினும் அவற்றிலுந் தீஞ்சுவைக்கனிகள் உண்டு. எனினும், ஒட்டுமாங்கனிகள் மிகுதியாய்க் கிடைக்கக்கூடிய காலம் வளர வளர, ஏழை யெளியவர்களைத் தவிர ஏனையோ ரெல்லாரும் ஒட்டுக் கனிகளையே மிகுதியும் வாங்கி அயில்கின்றனர். மேலும் ஒட்டு மாமரங்கள் வரவர நாடெங்கும் மிகுதியாய்ப் பயிர்செய்யப்பட்டுப் பெருகுதலால், இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் அவை மிகுந்த விலைக்கு விற்றதுபோலில்லாமல், இப்போதவை நயமான விலைக்குக் கிடைக்கின்றன. அதனாற், கொட்டை மாம்பழங்கள் இந்நாளில் மிகுதியாய் விற்கக் காணோம். என்றாலும், ஊறுகாய் செய்வதற்குப் பெரும்பாலுங் கொட்டைமாங்காய்களையே எல்லாரும் பயன்படுத்துகின்றனர். மாங்கொட்டைகளையும் இராக்காலக் குழம்புகளுக்குச் சைவர்கள் பயன்படுத்து கின்றார்கள். மாம்பருப்புகள் வயிற்றுளைச்சலைப்போக்குதற்குச் சிறந்த மருந்தாக எளிய மக்களாற் பயன்படுத்தப்படுகின்றன.

L

இனி, யாங்கள் ஒட்டுமாம்பழங்களைப் பழங்களாகவே பயன்படுத்தியதுடன், அவற்றின் காய்களையும் பருப்புக் குழம்பு, வெல்லப்பாகு, தயிர்ப்பச்சடி முதலியவற்றிற் சேர்த்து அருந்திப் பார்த்ததில், அவை இவ்வகையிலுங் குழைவுஞ் சுவையும் மிக்கனவாய் இருத்தல்கண்டு உவப்புற்றோம். ஊறுகாய் இட்டாலும் ஒட்டுமாங்காய்கள் களிப்பாய் நாவுக்கு நன்சுவை விளைக்கின்றன. இங்ஙனம் பல வகையாலும் பயன்பட்டு நம்நாட்டவரை இன்புறுத்தும் . மாமரங்களை நம்மனோர்க்கு வழங்கிய இறைவன் றிருவருளுக்கு நம்முடைய நன்றியையும் வணக்கத்தையுஞ் செலுத்துவாமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/230&oldid=1585226" இலிருந்து மீள்விக்கப்பட்டது