உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

199

7. அறிவும் உழைப்பும் விடாமுயற்சியும்

உழைப்பும் விடாமுயற்சியும் உடைய அறிவாளிகள் சிலர் ஆங்காங்குத் தோன்றுவதனாலேயே மக்கள் வாழ்க்கையானது மேன்மேல் அறிவும் இன்பமுந் தருந்தகைத்தாய் நடை பறுகின்றது. அத்தன்மையரான அறிஞர் தோன்றாத மிகப்பழைய காலங்களில் நம்முன்னோர்கள் எங்ஙனம் உயிர் வாழ்ந்தனரென்பதைப் பழைய மக்கள்வரலாறு நுவலும் நூல்களில் (Anthropology) நாம் படித்துப் பார்ப்பமாயின், நந் நெஞ்சங் கலங்காதிராது. நாடோறும் உண்ணுதற்குச் செவ்வை யான உணவும் உடுக்கக் கூறையும் இன்றி அவர்கள் பட்டபாடு நினைக்க நினைக்கப் பெருந் திகிலை உண்டுபண்ணுகின்றது. வயிற்றுக்கு உணவுதேடித் தந்து தமது உடலை ஓம்புவதே அவர்கட்கு அந்நாளில் ஓயாப் பெருமுயற்சியா யிருந்தது. இப்போதுள்ள யானைகளைவிடப் பன்மடங்கு பெரியவான 'மாமதம்' (mammoth) என்னும் பெரிய யானைகள் அந்நாளில் மந்தை மந்தையாக இருந்தன. அவ்வானைகளை யொப்பவே பெரியவான கல்யானைகளுங், கொடும்புலிகளும், அரிமாக் களும், மலைப்பாம்புகளும், பெருமுதலைகளும், பெருங் கழுகுகளுங், கொடும்பெருங் குரங்குகளுங், கடல் நீரின் மட்டுமன்றி நிலத்தின்மேலும் வந்துலவும் பெரிய பெரிய கடல்விலங்குகளும் இம்மாநிலத்தே திரிந்தன. அவற் றிடையேயிருந்து உயிர்பிழைத்த பண்டைநாள் மக்கள் இருக்க இல்லம் அமைக்கத் தெரியாதவர்கள்; மலைக் குகைகளையும் மரப்பொந்துகளையும் மர உச்சிகளையுமே இருப்பிடமாய்க் கொண்டவர்கள். நெடுங்காலம் வரையில் தமதுடம்பைக் குளிரும் வெப்பமுந் தாக்காமல், தழைகளாலேனும் மரப்பட்டை களாலேனும் விலங்கின் தோல்களாலேனும் மறைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/231&oldid=1585235" இலிருந்து மீள்விக்கப்பட்டது