உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் -18

காள்ளும்வகை தெரியாதிருந்தவர்கள். த்துணை இடர்ப்பாட்டிற் சிறுசிறு கூட்டத்தினரா யிருந்த அப்பண்டை மக்கள், தமக்குந் தம்மைச்சேர்ந்தார்க்கும் உணவு தேடும் பொருட்டுக் காடுகளிலும், மலைகளிலுங், கடலோரம் யாற்றோரங்களிலுஞ் சென்றக்கால், அக்கொடிய பெருவிலங்கு களால் அவர்கள் எவ்வளவு துன்புறுத்தப் பட்டிருக்கவேண்டும்! அவற்றோடு போராடியதில் எத்தனைபேர் மடிந்திருக்க வேண்டும்! அவர்கள் எல்லாருமே அக்கொடுவிலங்குகளின் போராட்டத்தில் மாண்டு மடிந்துபோயிருந்தால், நாமெல்லாம் இங்கே தலைக்காட்டிப் பிறந்திருத்தல் கூடுமோ! அப் பழைய போராட்டத்தில் அவ்விலங்கினங்களுக்குத் தப்பிப் பிழைக்கும் வகை கண்டறியும் பொருட்டுத் தம் அறிவையும் விடாமுயற்சியையும் பயன்படுத்தி அவற்றைத் தப்பி யுயிர் வாழ்ந்த சிலராயினும் வழிவழித் தோன்றினமையாலன்றோ நாம் இஞ்ஞான்று நாகரிகத்திற் சிறந்து இன்ப வாழ்க்கையில் வாழ்கின்றோம்.

அப்பண்டைமக்கட் சிறுகூட்டத்தில் ஒரு சிலர் ஏனை யோரிலுஞ் சிறிது அறிவுவிளக்கம் உடையராகித், தம்மொடு ஓயாப் போர் மலைந்த அக்கொடுவிலங்குகளைக் கொல்லு தற்கு வலிய தீக்கற்களிலிருந்து கத்திகளும் மழுப்படைகளும் அம்புகளுஞ்செய்யக் கற்றுக்கொண்ட காலந்தொட்டும்; அதன்பின் அப்படைகளைக்கொண்டு அவ் விலங்குகளைக் கொன்று அவைதம் இனங்கள் பின்னர் அச்சத்தால் தம்மை யணுகாமல் அகன்றோடிவிடத் தாங்காடுகளிலும் மலை களிலும் அச்சமின்றி யுலவி ஆங்காங்குள்ள காய்களையுங் கனிகளையுங் கிழங்குகளையும் வித்துக்களையும் இலை களையும் மிகுதியாய்ப் பெற்றுண்டும், மரக்கோடுகள் பொந்துகளிற் கிடைத்த தேனையும் மலைச்சுனைகள் மலையருவிகள் கான்யாறுகள் மடுக்களிற் பெற்ற நீரையும் பருகியும் நாளுக்குநாள் உடல்நல மனநலங்களிற் சிறந்து அவரது கால்வழி பெருகத்துவங்கிய காலந்தொட்டும்; அதன்பிற் றம்மை யெதிர்த்துத் தம்மாற்கொல்லப் பட்ட விலங்கின் தசைகள் மலைப்பாறைகண்மேற் கிடந்து வெயில் வெப்பத்தால் வெதுப்பப்பட்டுத் தின்னுதற் கேற்ற மணமுஞ் சுவையும் வாய்ந்தனவாதலைக் கண்டுகொண்ட அம்மக்களில் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/232&oldid=1585243" இலிருந்து மீள்விக்கப்பட்டது