உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

இளைஞர்க்கான இன்றமிழ்

201

சிலர், வெயிலைப்போல் வெய்யவாய்ச் சுடும்நெருப்பு ஒன்று உண்டென்பதைத் தாந் தீக்கல்லிலிருந்து கத்தி மழு முதலான கருவிகள் அமைத்தக்காற் பறந்த தீப்பொறிகளால் அறிந்து, அக்கற்களை ஒன்றோடொன்று மோதி யுண்டாக்கிய தீயிற் பிறகு அவ்விலங்கின் தசைகளை வதக்கிச் சுட்டுத் தின்னத் தெரிந்த காலந்தொட்டும் ; பறவையினங்கள் தாங் குஞ்சு பொரிக்கும் பருவம் அண்முதலும், நார்களாலும் மரக்குச்சி களாலும் மரப்பஞ்சுகளாலுங் கூடுகள் கட்டி கட்டி அவற்றி னுள்ளிருந்து முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து இனிது வாழ்தலை உற்று நோக்கிய அப்பழைய மக்களிற் பின்னுஞ்சிலர் தாமும் அப்பறவைகளைப்போல் மரக்கொம்புகள் வளார்கள் நார்கள் இவைகளாற் சிறுசிறு குடில்கள் அமைத்து அவற்றுட் டாமுந் தம்மக்களும், வெயில் மழை பனி பனிக்காற்று முதலியவைகளால் அலக்கணுறாமல் இனிது வாழத்தெரிந்த காலந்தொட்டும்; மழையில் நனையாமலுங் குளிரில் நடுங்காமலும் பறவைகள் விலங்குகள் உடம்பெங்கும் மயிர்ப் போர்வையால் நன்கு மூடப்பட்டிருத்தலைக் கருதிப் பார்த்த அப்பண்டை மாந்தரிற் பின்னுஞ்சிலர் தாமுந் தாங்கொன்ற விலங்குகளின் தோலை உரித்தெடுத்து அவற்றின்மேலுள்ள மயிரைச் சீவாமற் றம்மேல் அவை தம்மைப் போர்த்துக் கள்ளத் தெரிந்த காலந்தொட்டும்; அப்பறவைகளும் அவ்விலங்குகளுந் தம்மெண்ணங்களைத் தமக்குட் சிற்சில ஒலிகளால் அறிவித்துக்கொள்ளுதலைப் பலகாலும் உற்று நோக்கி வியந்த அம்மாந்தரில் மேலுஞ் சிலர் தாமும் அவைபோற் சிற்சில ஒலிகளை எழுப்பித் தங்கருத்தைத் தம்மனோர்க் கறிவிக்கத் துவங்கிய காலந்தொட்டும் நம் முதுமக்களின் வாழ்க்கையானது வரவர நாகரிகத்தில் வளர்ந்தோங்கி வரலாயிற்றென்பதை நாங் கருத்திற் பதித்தல்வேண்டும்.

பூ

அங்ஙனம் நம் பண்டைமக்கள் தமதறிவை மேலுக்கு மேற்பயன்படுத்தி உழைப்பும் விடாமுயற்சியும் உடையராய் நடந்திராவிட்டால், மக்கட் பூண்டென்பதேயொன்று சுவடில்லாமல் மாய்ந்து மறைந்துபோயிருக்குமென்பதை நாஞ்சொல்லுதலும் வேண்டுமோ? அவ்வாறு அவர்கள் இந்நிலவுலகிற் றோன்றிய காலம்முதற் சிறிதும் மடிந்திராமல் அறிவும் முயற்சியும் உடையராய் ஒழுகி வாழ்க்கை செலுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/233&oldid=1585252" இலிருந்து மீள்விக்கப்பட்டது