உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

251

அழித்து உறையுளு உறையுளுக்குக் குடியிருப்புகளும், நெற்பயிர் விளைத்தற்கு நன்செய்களும் வரகு சோளம் துவரை முதலான கூலப் பயிர்களை விளைத்தற்குப் புன்செய்களும் பண்படுத்தினர். இவ்வாறு காட்டை யழித்து நாடாக்கும் உழைப்புப் பழங் காலத்தே மிகுதியாய் ஆங்காங்கு நடைபெற்று வந்தமை,

“காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி”

என்னும் பட்டினப்பாலை அடிகளாலுந் தெற்றென விளங்கு தல் காண்க.

ங்ஙனமாக நெற்பயிரும், ஏனைப் புன்செய்ப் பயிர் களும் எங்கும் நிறைய விளைக்கலான, மருதநில வாழ்க்கை ஓங்க ஓங்க மக்களுக்குச், செல்வம் பெருகலாயிற்று. அதனாற், சிறிய பெரிய திருக்கோயில்களுந், தாம் இருந்து நன்கு உயிர் வாழச்சிறிய பெரிய இல்லங்களும் அவர்கள் ஆங்காங்கு

அமைத்துக்கொண்டனர்.

இவ்வாறு வாழ்க்கை வளம்பெற்றபின், தாம் விளைத்த உணவுப்பண்டங்கள், தாமுந் தங் கிளைஞரும் ஆரத்துய்த்த பின்னுங் குறையாமல் நிறைந்து கிடந்தமையால், அவற்றை இன்றியமையாது வேண்டிய பிறநாட்டிலுள்ளார்க்கு விலை சய்து, அப் பிற நாட்டார் கொணர்ந்த பண்டங்களைத் தாம் விலைகொடுத்துப் பெற்றுத் தம் நாட்டவர்க்கு மிகுதிப்பட விற்று ஊதியம் பெற்று வந்தனர்.

வாழ்க்கை வளம் பெற்று மனவமைதியோடிருக்கலான பின், இயற்கையே அறிவு விளங்கப்பெற்ற சிலர் தாம் வழங்கும் மொழியை எழுத்திலிட்டு எழுதி அண்மையிலிருப்பவர் களுக்குத் தம் கருத்துக்களை எளிதில் அறிவிப்பதுபோற், சேய்மையிலிருப்பார்க்கும் அறி7விக்க வழிகண்டனர். அது முதல் தங் கருத்துக்களை ஒரு கோவைப்படுத்திப் பனையோலை களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைக்கத் தலைப்பட்டனர். இன்றுங்கூடக் காகிதங் கிடைப்பதில்லாத பட்டிக் காட்டிலிருப்பவர்கள் கணக்கெழுதவும், திருமணம் முதலான சடங்குகளைத் தஞ் சுற்றத்தார்க்குத் தெரிவிக்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/283&oldid=1585544" இலிருந்து மீள்விக்கப்பட்டது