உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

257

பழைமையுடைத் தென்பது ஒரு சிறிதுரைப்பாம். தமிழ்மொழி யிலே யுள்ள சொற்களெல்லாம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ

ஓ, ஒள என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர் களோடு கூடிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய்யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்குகின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக்களைக் கொண்டு அவ்வாறு தொடங்குகின்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ்வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற்களுடையனவாய்க் காணப்படுகின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம் ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது, இடம்பம், அரத்நம், இலவணம் முதலியவனாகத் திரித்துத் தமிழ் மக்கள் வழங்குகின்றார். நன்னூல் முதலான இலக்கண நூல்களும் அவ்வாறே வழங்குமாறு விதிக்கின்றன. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது அங்ஙனந் திரித்துக் கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச் சொற்கள் ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத் துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகியாராம்வழியுத் தமிழ்மொழி மற்று எவ்வெல்லா மொழிகளினும் பழைமைதா மென்னும் உரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதல்.

ண்

இனி, ஒரு மொழியின் தோற்ற முறையினை நோக்கவல்ல நுண்ணறிவாளர்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமா றறியாது குறிப்பாலு ணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கையினிகழும் ஒலிவகைபற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிது சிறிதாய்ச் சொற் சொல்லுமாறு அறிந்து அறிவு கூடப் பெற்று வரும் மக்கட் ன்மையும், தாய் தந்தையர் கூட்டுறவானே சொற்சொல்லு மாறு அறிந்து அறிவு கூடி வருஞ் சிறுமகா ரியல்புந் தம்முளொத்த பெற்றிமை யுடையவாமாறு இனிது விளங்கும். எனவே ஒருமொழியின் தோற்றமுறை நன்காராய்ந் தளந்தறி தற்கு இன்றியமையாப் பெருங்கருவியாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை உற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறுமகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/289&oldid=1585551" இலிருந்து மீள்விக்கப்பட்டது