உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

  • மறைமலையம் -18

மறைமலையடிகளின் தமிழ்த் தொண்டு

இவ் யாண்டை மறைமலையடிகளாரின் நூற்றாண்டாகத் தமிழ் நாடெங்கிலும் கொண்டாடுகின்றனர். இவ் வேளையில் அவர் தம் நூல்களைப் பற்றி ஓரளவு ஆராய்வோம்.

அறிவியல்

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் அறிதுயில், மனித வசியம், மரணத்தின் பின் மனிதர்நிலை ஆகிய அறிவியல் நூல்களை அழகு தமிழில் எழுதியுள்ளார். அறிதுயில் என்னும் நூலில் மன ஒருமையின் ஆற்றலைக்கொண்டு நோய், தீய பழக்கம் இவைகளை ஒழித்து நல்வழி யடையும் வழிவகைகளைக் கூறி யுள்ளார்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் த

ஊறுபாடு இல்லை உயிர்க்கு

(குறள் 945)

என்னும் இக் க் குறட்பாவிற்கு அரியதோர் இலக்கணம் அடிகளாரின் பொருந்தும் உணவும் என்னும் நூலாகும்.

விரும்பும் குழந்தைகளைப் பெற்று மகிழ்வது இவ்விருபதாம் நூற்றாண்டு அறிவியலால் முடியாது. ஆனால் அடிகளாரின் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் ஆண் குழந்தையை விரும்பினால் ஆண் குழவியையும் பெண் குழந்தையை விரும்பினால் பெண் குழவியையும் பெற்றுக் கொள்ளும் வழி வகைகள் திருமூலர் திருமந்திரத்தின் மூலம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில் நெடுநாள் நோயற்று வாழவும் வழி கூறப்பட்டுள்ளது. “மரணத்தின் பின் மனிதர் நிலை நூலைப் படித்தவர்களுக்கு இறப்பைப் பற்றிய அச்சம் ஏற்படாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/310&oldid=1585574" இலிருந்து மீள்விக்கப்பட்டது