உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி நூல்கள்

  • பின்னிணைப்பு

279

மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும், தமிழர் மதம், வேளாளர் நாகரிகம், பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் க் போன்ற ஆராய்ச்சி நூல்கள் அடிகளால் எழுதப் பெற்றன. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூல் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறத்தக்கதோர் ஆராய்ச்சிக் கருவூலமாகும். இந்நாளில் தொல்காப்பியத்தின் காலமும் தமிழ்ச் சங்கங்களின் வரலாறும் ஆழ்வார்களது காலமும் இன்ன பிறவும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழர் மதம் என்னும் நூலில் அம்மையப்பர், தமிழர்களுடைய மணவாழ்க்கை, சைவம், வைணவம், தமிழ்த் திருமணம் நடத்தும் முறைகள், சீர்திருத்தக் குறிப்புக்கள் முதலியன வேண்டிய அளவு, மிகாமல் விவரிக்கப் பட்டுள்ளன. தொல்காப் பியத்தின் பழமையையும் தமிழினது மேன்மைகளையும் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் புகுந்தமையையும் விளக்கமாக அடிகளாரின் டைக்காலறு தமிழரும் ஆரியரும் என்னும் நூலில் காணலாம்.

சமய நூல்கள்

அடிகளார் தமிழையும் சைவத்தையும் இருகண்களாகப் போற்றியவர். புராணக் கதைகளை அடியோடு வெறுத்து ஒதுக்குவார். பழந்தமிழரது கொள்கையே சைவம் என்பது அன்னாரது கருத்து. ஆரிய மறையை அவர் தமிழ் மறையென ஒப்புக்கொள்ள மாட்டார். சைவ நூல்களில் குறிக்கப்படும் மறை, தமிழ்மறை நூல்களைத்தான் குறிக்கும் என்பது அடிகளின் முடிந்த முடிபு. இக் கொள்கைகளையெல்லாம் அடிகளாரின் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், பழந்தமிழ்க் கொள்கைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. சைவ சித்தாந்த ஞானபோதம், சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூல்களில் ஒளிர்வதைக் காணலாம். சமய நூல்களுக்கெல்லாம் முடிமணியாத் திகழ்வன சிவஞான போத

ஆராய்ச்சி நூல்களாகும்.

பல் வகை

பள்ளிச் சிறுவர் சிறுமியர்களுக்காகச் ‘சிறுவர்க்கான செந்தமிழ்’ இளைஞர்களுக்காக 'இளைஞர்க்கான இன்றமிழ்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/311&oldid=1585575" இலிருந்து மீள்விக்கப்பட்டது