உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் 18

மற்றும் ‘அறிவுரைக் கொத்து' முதலான கட்டுரை நூல்களை 6 எழுதியுள்ளார். இராசாசி, அன்று இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய போது 'இந்தி பொதுமொழியா?' என்னும் நுண்மாண் நுழைபுலம் மிக்கதொரு கட்டுரையை மாற்றாரும் மறுக்க இயலாதவாறு எழுதியுள்ளார்.

·

அம்பிகாபதி அமராவதி என்னும் நாடக நூலும் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் கதையும் படிக்கப் படிக்கத் தித்திப்பவை. முல்லைப் பாட்டாராய்ச்சி பட்டினப்பாலை ஆராய்ச்சி முதலிய நூல்கள் அடிகளாரின் இலக்கியத் திறன் ஆய்வுக்குத் தக்க சான்றுகள்.

இறுவாய்

மறைமலையடிகளின் நூல்களில் பலவற்றைச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமும் சிலவற்றைப் பாரி நிலையமும் வெளியிட்டிருக்கின்றன. அடிகளாரின் அனைத்து நூல்களும் 'ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாது இருத்தல் வேண்டும். திருமணப் பரிசாக ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கையை’ அளிக்கலாம். நண்பர்களுக்கு அறிவியல் மற்றும் சமய நூல்களை அன்பளிப்பாகத் தரல் வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் கட்டுரை, பேச்சு, நாடகம் முதலான போட்டிகளில் வென்றவர்களுக்கு அறிவியல், ஆராய்ச்சி, இளைஞர்க்கான இன்றமிழ் முதலான நூல்களைப் பரிசாகத் தருதல் வேண்டும். இப்படிப் பல்வேறு வகைகளில் அடிகளின் நூல்களை பரவச் செய்வது நமது கடமையாகும். இச் செய்கையே அடிகளாரின் கைம்மாறு கருதாத் தொண்டுகளுக்கு நாம் சய்யும் நன்றியுணர்வைக் காட்டும். நம் அடிகளின் தனித் தமிழ்த் தொண்டு ஓங்குக.

திருச்சிற்றம்பலம்.

- இரா. தாமோதரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/312&oldid=1585576" இலிருந்து மீள்விக்கப்பட்டது