உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

281

மறைமலையடிகள் தமிழ்நெறி மன்றம், (தலைமை நிலையம்) வெளியீடு! தூத்துக்குடி.

அடிகளின் சிறப்பியல்புகள் பற்றித் தமிழ்ப் பேரறிஞர்களின் கருத்துக்கள்

"மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெரும் தவத்தின் தவவுருவினர் ஆவர். செந்தமிழினையும் சிவநெறியினையும் அவற்றின் பகைவரால் நலிவுறாவண்ணம் பாதுகாத்து அவற்றிற்குப் பேரறிவின் அடிப்படையிட்டவராதலின், தமிழ்ச் சைவ உலகத்தாரால் தமது தலைமணியாக போற்றற் பாலர். தனித்தமிழிலேயே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ் சொற்சுவை மிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும், சொன்மாரி பொழிவதிலும் இவருக்கு ஒப்பாவர் எவருமிலர். வரது சொல்லினிமைக்கு ஏற்பக் குயிலோசை போன்ற குரலினிமையும் இவருக்கு இயற்கையில் அமைந்துள்ளது பெருமகிழ்ச்சி தரத்தக்கது. தொல்காப்பியர் காலத்துக்கு முன் இருந்த பண்டைத் தமிழ் நாகரீக நிலையினுக்குப் புத்துயிரளித்து அதனை இன்றும் என்றும் நிலவச் செய்வதற்குரிய பெருமுயற்சி யினை இவர் தமது தலையாய கடமையாகக் கொண்டவர்.

- பேரறிஞர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.

"மறைமலை ஒரு பெரும் அறிவுச்சுடர்; தமிழ் நிலவு; சைவவான், அவர்தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்.”

திரு.வி.க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/313&oldid=1585577" இலிருந்து மீள்விக்கப்பட்டது