உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • பின்னிணைப்பு

283

இந்நாளில், தமிழ் நூலாராய்ச்சி முறைக்கும், திருந்திய செந்தமிழ் உரைக்கும் அடிகள் சிறந்த வழிகாட்டியாய் இலங்குகின்றார்கள்.”

- ச. சச்சிதானந்தம் பிள்ளை

"தமிழுக்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழுக்காகவே உயிர் நீத்தவர் அடிகள் ஒருவரேயாவர்.”

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி.

1. அடிகளின் தமிழ்நெறிக் கொள்கைகளிற் றலைசிறந்தன மெய்யுணர்வுக் கருத்துக்கள்

1. கடவுளன்பு (வழிபடுதல்)

2. உயிர்களிடத்தன்பு (அன்பு செய்தல்) 3. மக்களிடத்தன்பு (தொண்டு செய்தல்)

4. சிவநெறிப் பற்று (சைவ சமயப் பற்று)

5. திருமால் நெறி முதலிய இந்து சமயங்களில் பற்றும், மதிப்பும் 6. இந்து சமயப் பொதுநெறி காத்தல்

7.“பொதுநிலை நெறி” (சமரச சன்மார்க்கம்) என்று அடிகள் போற்றிய வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளின் சமரச சன்மார்க்க நெறியைப் போற்றல்.

8. சிவநெறித் தலைவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரைச் சிறப்பு முறையில் போற்றுதல்.

9. அவர்கள் அருளிய தேவாரத் திருவாசகத் திருமுறைகளை மறை எனப் போற்றல்.

10. இவ்வாறே ஆழ்வார்கள் அருளிய பாடல்களையும், திருமால் நெறியினர் மறை எனப் போற்றல் தக்கதே.

11. சிவநெறி, திருமால் நெறிகள் தமிழ்ச் சான்றோர் கண்டவையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/315&oldid=1585579" இலிருந்து மீள்விக்கப்பட்டது