உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் -18

12. அவற்றைப் போற்றல் தமிழர் கடன்.

13. இரு ரு நெறிகளின்

வழிபட்டுய்தல் வேண்டும்.

-

திருக்கோவில்களையும்

கடவுள் நெறிக்கேலா

-

14. தமிழர் நெறியாகிய சைவ, வைணவ நெறிகளில் புகுந்து விட்ட பகுத்தறிவுக் கொவ்வா காலத்திற்குப் பொருந்தாக் கதைகளைக் கருத்துக்களை ஒதுக்கி விடுதல்.

15. புனைந்துரைப் புராணங்களாயினும் நிகழ்ந்த புராணங் களாயினும், அவற்றால் பெறப்படும் நற் கருத்துக்களையும், உண்மைகளையும் (தத்துவம்) போற்றிக் கொள்ளுதல்.

16. மெய்கண்டாரால் வகுக்கப்பட்ட சிவநெறிக் கொள்கை களைப் போற்றிக் கடைப்பிடித்தல்.

17. அக் கொள்கைகட்குப் புறம்பாகப் புகுந்துவிட்ட கருத்துக்களைக் கைவிடல்.

18. தமிழ்ச் சான்றோர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், சிவநெறி நாயன்மார்கள், திருமால் நெறி ஆழ்வார்கள், பட்டினத்தார், தாயுமானவர். இராமலிங்க அடிகள் முதலியோர் அருளிய தமிழ் மறைக்கு மாறுபடாத ஒத்த கருத்துக்களான வடமொழியிலுள்ள வேத, ஆகம, உபநிடதப் பகுதிகளை ஏற்றுக் கோடல் தவறாகாது.

19. திருக்கோயில் சடங்குகளையும், வாழ்க்கைச் சடங்கு களையும் வடமொழி கொண்டு செய்தல் கூடாது. தமிழ் மறைகள் கொண்டு செய்தல் வேண்டும்.

20. புலால் உணவை அறவே விலக்குதல் வேண்டும். 21.திருவள்ளுவர் கூறும் நற்பண்புகள் யாவற்றையும் கடைப் பிடித்தல் வேண்டும்.

(1. அடிகளின் இக்கொள்கைகள் அவர்தம் நூல்களிற் காணப்படுவையாகும்.)

மன்பதைக் கருத்துக்கள்

1. சாதி, குல, குடி, வேறுபாடுகள் பாராமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/316&oldid=1585580" இலிருந்து மீள்விக்கப்பட்டது