உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் -18

அடித்துப் பறந்து வருவது போலவும் தோன்றுதலை நோக்குங்கள்!

ங்ஙனமாக, அப்பரிதி வானவனது தோற்றம், ஒளி வடிவான கடவுளின் தோற்றத்தையே ஒத்திருக்கின்றது. அது அல்லாமலும், அக்கடவுள் ள் எல்லா உயிர்களையும் அறியாமை என்னும் இருளினின்றும் விடுவித்து, அவற்றின் அறிவை விளங்கச் செய்தல் போல, இவ் என்றூழும் உறக்கத்திலிருந்த எல்லா உயிர்களின் அறிவையும் எழுப்பி, அவைகளைப் பலவகை முயற்சிகளில் ஏவுகின்றது பாருங் கள்! கனலி தோன்றுகிற விடியற்காலத்தில் கோழி கூவு கின்றது, காக்கை கரைகின்றது, மாந்தோப்புகளின் உச்சி யிலே குயிலின் இனிய ஒலி கேட்கிறன்து. இன்னும் எத் தனையோ பறவைக் கூட்டங்களின் எத்தனையோ வகையான ஓசைகளும் தோன்றுகின்றன. இரவெல்லாம் கொட்டிலில் கிடந்த ஆக்கள் (பசுக்கள்) தொகுதி தொகுதியாக வெளி நிலங்களில் புல்மேயப் போகின்றன. உழவர்கள் எருதுகளை ஏரிற்பூட்டி வயல்களை உழத் துவங்குகின்றனர்.

இரவு முழுவதும் தூக்கமயக்கத்துடன் சரக்குவண்டிகள் ஓட்டி வந்த வண்டிக்காரர்கள் அச்சரக்குப் பொதிகளைப் பண்டசாலை முற்றங்களில் இறக்குகின்றனர். பல்வகைப் பொருள்களை விற்கும் கடைக்காரர்கள் எல்லாம் தத்தம் கடைகளை வரிசை வரிசையாகத் திறந்து வைத்து, அவை களை வாங்க வருவார்க்கு விற்பனை செய்கின்றனர். பல் வகைக் கைத்தொழிலாளர்களும் தத்தம் தொழிற்சாலை களுக்குச் சென்று தாம்தாம் செய்யும் தொழில்களைச் செய்யத் துவங்குகின்றனர். கின்றனர். அரசியல் தொழில் பார்ப்பவர் தத்தம் அரசியல் நிலையங்களுக்குச் செல்லுதலையும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயிலும் சிறுவர்களும், கல்லூரிகளில், பல்கலை பயிலும் இளைஞர்களும் தத்தம் கழகங்களுக்கு ஏகுதலையும் பாருங்கள்! கடவுள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களில் எல்லாம் கதவு திறந்து குருக்கள்மார் காலை வழிபாடு செய்வது எவ்வளவு சிறந்த மகிழ்ச்சியினைத் தருகின்றது! இங்ஙனமெல்லாம் நடைபெறும் உயிர்களின் இத்தனை முயற்சிகளுக்கும் காரணமாவது எல்லோனது தோற்றமே என்பது நன்றாய் விளங்குகின்றதன்றோ?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/47&oldid=1584661" இலிருந்து மீள்விக்கப்பட்டது