உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் -18

2. உலக இயக்கம்

நாம் உறையும் இவ்வுலகமானது வான் வெளியில் பந்து போல் சுழலும் ஓர் உருண்டை வடிவினதாகும். நாம் இருக்கும் இதன் மேற்பரப்பின் மையத்திலிருந்து இதனை ஊடுருவித் துளைத்துக் கொண்டு அளந்தபடியே நாம் இதன் கீழுள்ள மேற்பரப்பின் மையத்திற் சென்று சேரக் கூடுமாயின், இஃது 7,900 மைல் மைல் குறுக்களவுள்ளதாய் இருத்தலை அறிந்து கொள்ளலாம். இதன் சுற்றளவோ 25,000 மைலாகும்.

இஃது உருண்டை வடிவினதென்பது எங்ஙனம் அறியக் கூடுமெனின், நாம் ஒரு கடற்கரையிற் சென்று நின்று, அக்கரையை நோக்கி வரும் ஒரு கப்பலைக் காண்குவமாயின், நெடுந்தொலைவிலிருந்து வரும் அக்கப்பலின் மேலுள்ள பாய்மரங்களே முதன்முதன் கட்புலனாகும். பின்னர் அது இந்நிலச்சரிவில் பரவி நிற்கும் கடல்மேல் ஏறிக் கிட்ட வரவரப் பாய்மரத்தின் கீழுள்ள அதன் முழுவுடம்பும் பையப்பைய நன்கு புலனாய்த் தோன்றும். அங்ஙனமே, நாம் நிற்கும் கரையின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுத் தொலைவிற் செல்லும் ஒரு மரக்கலமானது கடல்நீர் சரிவின் கீழ் இறங்க இறங்க அதன் முழுவுடம்பும் சிறிதுசிறிதாய் மறைந்துபோக, அதன் மேலுள்ள பாய்மரங்களே பின்னும் சிறிது நேரம் வரையில் கட்புலனா கின்றன. பின்னும் பின்னும் அது கீழ் இறங்க அதன் பாய் மரங்களும் மறைந்து போகின்றன. இதனால் இவ்வுலக L மானது உருண்டை வடிவினதாதல் பெறப்படுகின்றதன்றோ? இன்னும் நமது இலங்கைத் தீவின் தென்முனைக் கண்ணதான மாத்தளை யிலிருந்து புறப்பட்டுக் கிழக்கு நோக்கியே செல்லும் ஒரு நாவாயானது, மீண்டும் அம்மாத்தளைத் துறைமுகத் திலேயே வந்து சேரக் காண்டலாலும் இந்நிலவுலகம் உருண்டை வடிவினதென்பது விளங்கா நிற்கின்றது. இதற்கு ஒரு பந்தின் நடுவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு நேரே செல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/49&oldid=1584663" இலிருந்து மீள்விக்கப்பட்டது