உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

  • மறைமலையம் -18

இராக்காலத்தில் நமக்கு நிலவொளியினைத் தரும் திங்கள் மண்டிலமும் இந்நிலவுலகத்தால் இழுக்கப்பட்டு, இதனைச் சுற்றியபடியே ஞாயிற்றினையும் சுற்றிச் செல்கின்றது. இங்ஙனமே, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி முதலான உலகங்களும் ஞாயிற்றினை இழுக்க, அது மற்று இவ்வுலகங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே இழுக்க, இவை தாமும் தம்முள் ஒன்றை யொன்று சன்னல் பின்னலாய் இழுக்க ழுக்க எல்லாம் வான் வெளியிற் பற்பல பந்துகள் போல் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்லா நிற்கின்றன.

அற்றேல், மற்றை ஆறு மண்டிலங்களும் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்கின்றனவென்று கொள்ளுதல் என்னையெனில்; வேழு உலகங்களிலும், ஞாயிறு ஒன்றுமே மிகப்பெரியது. நாமிருக்கும் இந்நிலவுலகத்தைவிட ஞாயிற்று மண்டிலம் பன்னிரண்டு நூறாயிரம் மடங்கு பெரியதாய் இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாகப் பெரியதாய் உள்ளது வியாழ மண்டிலமே ஆகும்; இவ்வியாழன் நமது மண்ணுலகத்தினும் ஓராயிரத்து நானூறுமடங்கு பெரியது. இதற்கு அடுத்தபடி பெரியது சனி மண்டிலம். இதற்குச் சிறியது நமது மண்ணுலகு. நமது மண்ணுலகுக்கும் சிறியது வெள்ளியுலகு. அதற்கும் சிறியது செவ்வாய் உலகு. அதற்கும் சிறியது புதனுலகாகும். இங்ஙனம் மற்றை ஆறும், பகல் மண்டிலத்திற்குச் சிறியனவாய் இருத்தலால், சிறியவாகிய அவை பெரியதாகிய பகலுலகினால் ஈர்க்கப்பட்டு அதனைச் சூழ்ந்து ஓடியபடியாய் உலவுகின்றன என்றுணர்ந்து கொள்க.

இனி, முருகப்பிரானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் தொண்டர் சிலர், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைச் சுற்றி நிலத்திற்கிடந்து புரண்டுகொண்டே வலம் வருதலை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்ஙனம் புரண்டு வலம் வருபவர் முதலில் தம்மைத்தாம் சுற்றிப் பின்னர் அக்கோயிலைச் சுற்றி வலம் வருதல் போலவே, இவ்வுலகமும் முதலில் தன்னைத் தான் சுற்றிப் பிறகு ஞாயிற்று மண்டிலத்தினைச் சுற்றி வருகின்றது.

இஃது ஒருமுறை தன்னைத்தான் சுற்றுதலுக்கு இருபத்து நான்கு மணி நேரம் பிடிக்கின்றது. மேற்கிலிருந்து கிழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/51&oldid=1584665" இலிருந்து மீள்விக்கப்பட்டது