உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

6

சிறுவர்க்கான செந்தமிழ்

19

முகமாய் இஃது இங்ஙனம் தன்னைத்தான் சுற்றுங்கால் ஞாயிற்றினை நோக்கி இயங்கும் இதன் ஒருபாதி பகல் வெளிச்சம் உடையதாகவும், ஞாயிற்றின் முகமாய்த் திரும்பாத அதன் மறுபாதி இருண்ட அல்லது நிலவொளி கெழுமிய இராப்பொழுது உடையதாயும் காணப்படுகின்றன. நாம் உறையும் இத்தென்தமிழ்நாட்டில் பகலவன் உச்சியில் விளங்கும் வேளை நண்பகற் பொழுதாயிருக்கையில், நமக்குநேரே கீழ் உள்ள அமெரிக்கா தேயம் நள்ளிராப் பொழுது வாய்ந்ததாய் இருக்கின்றது; நமது தமிழ்நாட்டிற்கும் அமெரிக்கா தேயத் திற்கும் நடுவில் உள்ளதாகிய இங்கிலாந்து தேயமோ அப் போது விடியற்காலம் உடையதாய்த் திகழ்கின்றது.

இவ்வாறாக இவ்வுலகம் இருபத்துநான்கு மணிநேரத்தில் தன்னைத்தான் சுற்றியபடியாய், தன்னிலும் பன்னூறாயிர மடங்கு பெரிதான பகலவன் மண்டிலத்தை முற்றுஞ் சுற்றி வருவதற்கு முந்நூற்று அறுபத்தைந்தேகால் நாட்கள் ஆகின்றன. இங்ஙனம் இது ஒருமுறை கதிரவனைச் சுற்றி வருங்காலமே ஓர் ஆண்டு (வடமொழியில் வருஷம்) என்று சொல்லப்படுகின்றது. அங்ஙனம் வெய்யவன் உலகினைச் சுற்றிச் சுழன்று வருதல் உண்மையாயின், இதன் இயக்கம் நமக்குப் புலனாகாமையும், பகலவனே இதனைச் சுற்றி வருபவனாகப் புலப்படுதலும் என்னையெனின்; இஃது ஒரு மணிநேரத்தில் ஆயிரம் மைல் விழுக்காடு கதிரவன் மண்டிலத்தை மிகு விரைவாகச் சூழ்ந்து சுழலுதலால், அத்துணை விரைவாகச் செல்லும் இதன்கண் உயிர்வாழும் நமக்கு இதன் இயக்கம் புலனாகாது போக, இதனாற் சுற்றப்படும் பகலவனே இதனைச் சுற்றி வருபவன்போல் புலப்படுகின்றான். ஒரு மணிக்கு முப்பது மல் விழுக்காடு ஓடும் புகைவண்டியில் செல்லும் நம்மனோர்க்கே அப்புகை வண்டியின் ஓட்டம் புலப்படாமல் அதன் இருபக்கத்தும் நிற்கும் நிலனும், மரஞ்செடி கொடிகளுமே ஓடுவது போல் புலப்படுமாயின், நினைத்தற்கும் அரிய கடுவிரைவுடன் ஒருமணி நேரத்திற்கு ஆயிரம்மைல் விழுக்காடு சுழன்றோடும் இந்நிலவுலகின் இயக்கம் நமக்குத் தன்படுமோ சொல்லுங்கள்! ஆகவே, நிலையில் உள்ளது போல் காணப் படுவது பற்றி இம்மண்ணுலகு ‘நிலம்' என்னும் பெயரால் வழங்கப்படினும், ஆராய்ந்து பார்க்குங்கால்

மைல்

ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/52&oldid=1584666" இலிருந்து மீள்விக்கப்பட்டது