உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 18

வானக்கடலில் இது மிகுதியும் விரைந்து ஓடும் ஓர் ஓடமாகவே காணப்படு கின்றது என்க.

இனி, இந்நிலவுலகத்தின் இயக்கத்தில் வேறொரு முதன்மையான தன்மையும் உளது. இது தெற்கு வடக்கில் செங்குத்தாய் நின்றபடி சுழலாமல் தன் பருமன் 360 பங்கில் சிறிதேறக்குறையப் பதினைந்து பங்கு சாய்ந்தபடியாய் ஞாயிற்றினைச் சுற்றிச் சுழன்று செல்கின்றது. இங்ஙனம் சாய்ந்து சுழல்வதனால் இதன் வடமுனை தென்முனைகள் ஆறு திங்கள் பகலவன் முகமாய் திரும்பியும் பின் ஆறு திங்கள் பகலவனை விட்டுத் திரும்பியும் சுழல்கின்றன. அதனால் அவ்விரு முனைகளில் உள்ள நாடுகள் ஆறு திங்கள் ஒளியும் பின் ஆறு திங்கள் இருளும் வாய்ந்தனவாய் இருக்கின்றன. வடமுனையைச் சார்ந்த நாட்டின் கண்ணதான மேருமலையைச் சூழ்ந்த பகுதிகளில் ஆறு திங்கள் கதிரவன் ஒளியும், மற்றை ஆறு திங்கள் அவன் அங்குக் காணப்படாமையின் இருளும் தொடர்பாய் இருக்கின்றன என்று மாபாரத வனபர்வம் (163, 37, 38) பகர்வதும் நமது நிலவுலகின் சாய்ந்த இயக்கத்தால் அவ்விரு முனைகளில் காணப்படும் அவ்விருவகை நிகழ்ச்சிகளையே குறிப்பிக்கின்றது. ஆதலினால் தான், வடமுனையில் உறையும் மக்களுக்கு ஆறு திங்கள் ஒரு பகற்பொழுதாயும், மற்றை ஆறு திங்கள் ஓர் இராப்பொழுதாயும் இங்குள்ளவரால் கொள்ளப் பட்டு வருகின்றன. வடதேயங்களில் உறையும் மக்களைத் தேவர்களாகக் கொள்ளுதல் இத்தென்னாட்டவர்க்கு வழக்கம். ஆதலால், பகலொளி வீசும் ஆறு திங்களையும், அத்தேவர் கட்கு ஒரு பகற் பொழுதாகவும், அவ்வொளியின்றி இருள் சூழ்ந்த ஏனை ஆறு திங்களையும் அவர்கட்கு ஓர் இராப் பாழுதாகவும் இந்நாட்டவர் பண்டுதொட்டு வழங்கி வரு கின்றனர். இந்நுட்பங்கள் எல்லாம் பண்டை ஆரியமக்களின் பழைய உறையுளை நன்காராய்ந்த பாலகங்காதர திலகரால் விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருக்கின்றன. வடமுனையில் உள்ளார்க்கு ஒவ்வோராண்டிலும் பகலவனொளி முதன் முதல் கட்புலனாய் தோன்றும் விடியற்காலம் பங்குனித் திங்கள் ஒன்பதாம் நாள் துவங்குகின்றது. அதிலிருந்து ஆறு திங்கள் வரையில் சுடரவன் ஒளி வானின் கண் துலங்கிய படியாய் இருந்து புரட்டாசித் திங்கள் எட்டாம் நாள் மறைந்து போக,

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/53&oldid=1584667" இலிருந்து மீள்விக்கப்பட்டது