உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

21

அதிலிருந்து மறு பங்குனி வரையில் அவ்வடநாடுகள் இருள் சூழப்பட்டனவாய் இருக்கின்றன. அங்ஙனம் இருள் சூழ்ந்திருந்தாலும், பகலவன் தோன்றுவதற்கு முன் அறிகுறியாகக் காணப்படும் வைகறைப் பொழுது பங்குனிக்கு மூன்று திங்கள் முன்னரே மார்கழித் துவக்கத்தில் அந்நாட்டவர் கண்கட்குப் புலனாகுதலால்தான் இத்தென்னாட்டவர்கள் தேவர்கட்குப் பொழுது விடியும் காலமாக மார்கழித் திங்களைக் கொண்டாடி வருகின்றார்கள். ஆறு திங்கள் இருளில் கிடந்து மூழ்கும் மக்கட்கு ஒரு வகையில் ஆறுதலும் மகிழ்ச்சியும் தரும் பொருட்டு, இறைவன் அவ்வடமுனை நாடுகளுக்கு ஒரு பெரு மின்னல் ஒளியினைச் சிறிதுகாலம் வரையில் வானின்கண் தோற்றுவித்து வருதலையும் சிறார்கள் கருத்திற் பதித்து, இறைவனது பேரருள் திறத்தை வியந்து வாழ்த்துவாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/54&oldid=1584668" இலிருந்து மீள்விக்கப்பட்டது