உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

  • மறைமலையம் -18

3. குறிஞ்சி-மலை

நாம் உயிர்வாழும் இந்த நில உலகமானது, மலையும், கடலும், காடும், நாடும் என நான்கு பகுதிகளாக நம்முடைய பழந்தமிழ் நூல்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்நான்கும் அல்லாத வெறு மணல்வெளியும் உண்டு. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியென்று சொல்லப்படும்.

மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும் பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன.மிகவும் உயரமாக இருக்கும் மலையை ‘ஓங்கல்', ‘பிறங்கல்’, ‘பொருப்பு', 'வெற்பு', என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்' என்றும், ஒன்றன் மேலொன்று என்றும்,ஒன்றன் அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும், எதிரொலி செய்யும் மலையைச் 'சிலம்பு' என்றும், மூங்கிற்காடுகள் உள்ள மலையை ‘வரை' என்றும், காடுகள் அடர்ந்த மலையை 'இறும்பு' என்றும், சிறிய மலையைக் ‘குன்று’, ‘குவடு’, ‘குறும்பொறை' என்றும், மண் மிகுந்த மலையைப் ‘பொற்றை’, ‘பொச்சை' என்றும், மலைப் பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ்நூல்கள் கூறா நிற்கும்.

மலைகளின் இயற்கை அழகைக் காணவேண்டுமானால் தெற்கே திருக்குற்றாலம், பாவநாசம் முதலிய இடங்களி லுள்ள மலைகளையும் கிழக்கே கீழ்க்கணவாய் மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையையும், நடுவே நீலகிரி மலையையும், மேற்கே புனலூர் பக்கமாய் உள்ள மலை யாளத்தையும், வடக்கே இமயமலையையும் போய்ப் பார்த்தல் வேண்டும்.

தெற்கேயுள்ள பாவநாச மலையடிவாரத்தில் தனிநிற்கும் சிவபிரான் திருக்கோயிலும், அதன் வலப்புறத்தும் எதிரிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/55&oldid=1584669" இலிருந்து மீள்விக்கப்பட்டது