உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

23

ஓடிவரும் பொருநையாறும் (தாமிரபருணி) அவ்வாற்றங் கரையில் வான் அளாவி நிற்கும் மரங்களும், அவ்வாற்றங் கரையின் அப்பக்கத்தே நெடுகத்தோன்றும் மலைத் தொடரின் ஓரிடத்தில் முகடு சிவந்த ஓடுகள் வேய்ந்து உடம்பெல்லாம் வெண்மையாக அமைக்கப்பட்டுத் தோன்றும் பஞ்சாலைக் கட்டிடங்களும், கோயிலின் பின்புறத்தே அவ் வாற்றின்கண் காணப்படும் மண்டபங்களும், அம்மலைத் தொடர் எங்கும் உள்ள அடர்ந்த காடுகளும் புதிது சென்று பார்ப்பவர்களுக்கு அவர் முன்னறியாத ஓர் இன்பவுணர் வினை ஊட்டி அவருள்ளத்தைக் கிளரச் செய்கின்றன.

வைகாசித் திங்கள் முடிவில் அங்கேசென்று, அத்திருக் கோயிலிலிருந்து ஒரு நாழிகை வழி நடந்து சென்றால், அகத்தியர் கோயிலொன்று காணப்படும். மலைப் பக்கத்தி லிருந்து விரிந்த வெள்ளாடை தொங்க விட்டாற் போலக் குமுகுமு என்ற ஓசையுடன் கீழ்விழும் அருவியின் காட்சி எத்தகையவர் உள்ளத்தையும் கவரும் தன்மையதாய் விளங்கு கின்றது. அவ்வருவிநீர் கீழ்விழும் இடத்தில் மிக ஆழ்ந்த தொரு மடு அமைந்துள்ளது. அம்மடுவுக்குச் செல்லும் ஓர் ஒற்றையடிப்பாதை செங்குத்தான மலைச்சுவரை அடுத்துப் போகின்றது. அப்பாதையில் செல்லுங்கால், கீழ் இறங்கும் அருவி நீர்த் திவலையும் சாரற்காற்றும் செல்வோரின் முகத்திலும் உடம்பிலும் எதிர்த்து அறைவது போற்படும்; அப்போது கண்விழித்துப் பார்த்தாலும் வருத்தமாயிருக்கும். என்றாலும், அதற்கு அஞ்சாது எதிரேறிச் சென்று, அம்மடுவில் மிகவும் விழிப்பாய் இறங்கி முழுகினால், மிகக் குளிர்ந்த அந்நீரின் முழுக்கு மிக்கதொரு மனக்களிப்பினையும் ஆறுதலையும் தரும்; உடம்பின் நலத்திற்கும் மிக ஏற்றது.

அவ்வளவு நடந்து சென்று, அம்மடுவில் முழுக இயலாத வர்கள், அம்மடுவில் நிறைந்து வழிந்து, மேற்சொன்ன அகத்தியர் கோயில் பக்கமாய் விரைந்து ஓடிவரும் பாருநை யாற்றிலேயே நீராடலாம். ஆனால், அவ்விடத்தில் அவ்வாறு ஆழம் இன்றி இடுப்பளவிற்கும் குறைந்த நீர் உடையதாய் ஏகுதலால், அதில் படுத்தபடியாயிருந்து முழுகுதலே கூடும். அங்ஙனம் முழுகுங்கால் விழிப்பாயிருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாற்றின் நீர் மலைமேலிருந்து கீழ்விழுந்து மிகு விரை வாய் செல்வதனால், ஆளை நிலைக்கவிடாமல் புரட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/56&oldid=1584670" இலிருந்து மீள்விக்கப்பட்டது