உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

  • மறைமலையம் -18

தள்ளிக் கொண்டு போய்விடும். மேலும், அவ்யாற்றின் அடிப்படை யெங்கும் ஒருபெரும் பூசனிக்காய் பருமன் உள்ள உருண்டைக் கற்கள் நிறைந்திருக்கின்றன! அதனால், அதன் அடியிற் காலைப்பதியவைத்து நிற்றலும் முடியாது; சிறிது பிசகி விழுந்தாலும் புரண்டாலும் மண்டை அடிபடும்; உடம்பும் கால்கைகளும் அவற்றில் உரைசிக் காயப்படும். ஆனாலும், விழிப்பாயிருந்து நீராடுபவர்க்குப் பளிங்குபோல் தெளிந்து ஓடும் அதன்நீர் மேனிமேற் குளுகுளுவென்றுபட்டுப் பேரினிமை யினைத் தரும்.

நீராடியபின் அவ்வாற்றங் கரையினிடத்தே இருக்கும் அகத்தியர் கோயிலில் சென்று இறைவனை வணங்குவது உள்ளத்தைப் பேர் அருள் இன்பத்தில் அமிழ்த்தும். சுற்றி வானோங்கிய மலைகளும் காடுகளும் அடர்ந்திருக்க, எதிரே உள்ளதொரு மலை முகட்டிலிருந்து பால் ஒழுகுவது போல் ஓவென்ற இரைச்சலுடன் அருவி நீர் விழ, விழுந்த அந்நீர் திரண்ட கற்களின் மேல் விரைந்தோடிச் செல்ல, அங்ஙனம் அந்நீர் செல்லும் பொருநை ஆற்றங்கரைமேல் அவ்அகத்தியர் கோயில் தனிமையில் நிற்க. அதனுள் ஒரு குருக்கள் வழிபாடு செய்யும்போது, அங்கே வணங்கச் செல்வோர் மனம், உலக நினைவுகளை விட்டு, அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் அழகால் மேல் உந்தப்பட்டு, உயிர்களின் தனித்த துணையற்ற நிலைமையினையும், அந்நிலைமையில் இறைவன் ஒருவனே அவ்வுயிர்கட்கு ஒப்பற்ற துணைவனாய் வாய்த்துள்ள அருமையினையும் நினைந்து நினைந்து நெக்குவிட்டு உருகு

கின்றது.

இப்பாவநாசக் காட்சியினை ஒப்பவே, திருக்குற்றால மலை அடிவாரத்திலும் பெரியதொரு பழைய சிவபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் அருகேயும், மலை மேலிருந்து விழும் பெரியதோர் அருவி வீழ்ச்சி காண்டற்கு மிக இனியதோர் அழகினை உடைத்தாய்த் திகழ்கின்றது. வேனிற் கால நடுவில் இவ்வருவியில் தலைமுழுகுதற் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கினரான மக்கள் இத்தென்னாடு எங்கணு மிருந்து வந்து திரள்கின்றனர்.

இத்திருக்குற்றால மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்லுதற்குத் திருத்தமான அகன்றதொருபாதை அமைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/57&oldid=1584671" இலிருந்து மீள்விக்கப்பட்டது