உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

25

பட்டிருக்கின்றது. இது வளைந்து மேலே 'சண்பகாடவி’ வரையில் செல்கின்றது. இதனூடு செல்கையில் இதன் இரு புறத்தும் ஓங்கி வளர்ந்திருக்கும் அடர்ந்த மரக்காடுகளின் காட்சி மனத்திற்கு அச்சத்தோடு கலந்த ஒரு ரு மகிழ்ச்சியினைத் தோற்றுவிக்கும். சண்பகாடவியின் அருகே அழகியதொரு

L

மண்ட

பம் அமைக்கப்பட்டுள்ளது; அங்கே அருவி விழும் இடத்தின் பக்கத்தே ஒரு குகையும் உளது; இருபது ஆண்டு களுக்குமுன் யாம் அங்கே சென்றபோது இளம்பருவத்தின ரான ஒரு துறவி அக்குகையில் தங்கியிருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றுத், தாம் இருக்கும் அக்குகையின் உள்ளே எம் எம்மை எம்மை அழைத்து, அதன் உள் அமைப்பை எமக்குக் காட்டினார்.

இருபெருங் கற்பாறைகள் ஒன்றையொன்று தொடு தலால் அஃது ஒரு சிறிய அறைபோல் இயற்கையமைப்பு வாய்ந்திருந்தது. அதனுள் உயரமான ஒருவர் நேராக நிற்றல் இயலாது. குனிந்தபடியாகச் சென்றுதான் இருக்கவேண்டும். நான்கு பேர் இருக்கவும், இருவர் படுக்கவும் போதுமான இடந்தான் உளது. அத்துறவி அக்குகை வாயிலில் சிறு செங்கல் சுவர் எழுப்பி அதில் ஒரு சிறு கதவு பொருத்தி இருந்தார். வெளிக்காற்று உள்ளே நுழைவதற்காக அக்கதவின் மேற் பகுதியில் சிறுசிறுதுளைகள் உண்டு. இராக்காலத்தில் அருவி நீர் குடிக்கவரும் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி முதலான விலங்குகள் உருமும் ஓசையும் அவை ஒன்றை யொன்று சினந்து தாக்கிச் செய்யும் இரைச்சலும் பெருந் திகிலை விளைக்குமென்றும், நிலாக்காலத்தில் அக்கதவின் துளைவழியே தாம் அவ்விலங்குகளின் வடிவத்தைப் பார்ப்பது உண்டென்றும் அவர் எமக்குக் கூறினார். கீழே மலையடி வாரத்தில் விழும் அருவியைப் பார்க்கிலும் மேலே சண்பகாடவியில் விழும் அருவிநீர் குளிர்ந்ததாய் இருக்கின்றது; தண்ணீரின் அளவும் சிறிது குறைந்ததாக இருத்தலால் தலைமேலும் உடம்பின் மேலும் அதனைத் தாங்கி முழுகுவது இங்கே எளிதாயும் மிக இனிதாயும் இருக்கும்.

இனிச் சண்பகாடவியைத் தாண்டி, இன்னும் மேலேறி உயரத்திலுள்ள தேனருவிக்குச் செல்லத் திருத்தமான அகன்ற பாதை இல்லை. இண்டு இடுக்குத் தெரியாமல் அடர்ந் திருக்கும் பெருங்காடுகளின் ஊடே ஓர் ஒற்றையடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/58&oldid=1584672" இலிருந்து மீள்விக்கப்பட்டது