உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

27

4. முல்லை-காடு

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியே பெரும்பாலும் ‘காடு’ என வழங்கப்பட்டு வருகின்றது. காடும் காடு சார்ந்த இடமும் ‘முல்லை’யெனப் பெயர் பெறுமென்று தமிழ் நூல்கள் கூறாநிற்கும். பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறு மரங்கள் மிடைந்த காட்டை 'இறும்பு', 'குறுங்காடு' என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை ‘அரில்’, ‘அறல்’, ‘பதுக்கை’ என்றும் மிக முதிர்ந்து முற்றிப்போன மரங்களையுடைய காட்டை ‘முதை’ என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் ‘பொச்சை’, ‘சுரம்’, ‘பொதி என்றும் அரசனது காவலிலுள்ள காட்டைக் ‘கணையம்’, ‘மிளை', ‘அரண்' என்றும் பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர்.

சிறு

இங்ஙனம் பலவகையால் வழங்கப்படும் காடுகளில் பெரும்பாலான மலைகளின் மேலும் மலைகளின் கீழும் L மலைசார்ந்த இடங்களிலுமே காணப்படுகின்றன. பான்மைய கடல் சார்ந்த இடங்களில் இருக்கின்றன. திரு மறைக்காடு (வேதாரணியம்) என்னும் சிவபிரான் திருக் கோயில் உள்ள ஊரையடுத்த காடு கடலடுத்த நிலத்தின்கண் உள்ளது. பனங்காடு உடைவேலங்காடு முதலியன பாண்டி நாட்டில் இராமேசுவரம், திருச்செந்தூர் முதலியவைகட்கு அண்மையவான கடல்சார்ந்த இடங்களில் மிகுதியாய் உள்ளன.

வான் அளாவிய மரங்கள் அடர்ந்து, தொலைவிலிருந்து நோக்குவார்க்குப் பசுந்தழைப் போர்வையுடன் தோன்றி, அவர்தம் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய், அருகே சென்று தம்முள் நுழைந்து நோக்குவார்க்குப் பல்வேறு வகையான பருத்துயர்ந்த மரங்களும் செடிகொடிகளும் வாய்ந்தனவாய், உள்ளே செல்லச்செல்ல இருண்ட இடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/60&oldid=1584674" இலிருந்து மீள்விக்கப்பட்டது