உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் -18

களும் இடையிடையே பகலவன் வெளிச்சம்படும் சந்து வெளிகளும் தம் அகத்து உடையனவாய், நீர் ஊற்றுகளும் சிற்றருவிகளும் ஆங்காங்கு அமையப்பெற்று அவற்றை அடுத்துள்ள மரஞ்செடி கொடிகளில் பலவகைப் பறவைக் கூட்டங்களும் அவற்றின் ஒலிகளும் நிரம்பப் பெற்றவனவாய் தம்முள் செல்வாரின் உள்ளத்தை அச்சுறுத்தும் யானை புலி கரடி பெரும்பாம்புகளின் அடிச்சுவடுகளும் உடற்பதிவு களும் பொருந்தினவாய், சருகுகள் பூக்கள் கனிகள் வித்து கள் இடங்கள் தோறும் உதிரப் பெற்றனவாய், இடை யிடையே யே பட்டு வீழ்ந்து உள் இயங்குவாரின் வழிகளை L மறிக்கும் உலர்ந்த மரங்களும் கோடுகளும் வளார்களும் முட்களும் வேர்களும் கொடிகளும் துதைந்தனவாய் உள்ள பெருங்காடுகளைப் புனலூர், நீலமலை, திருக்குற்றாலமலை, அழகர்மலை, பாவநாசமலை, வெள்ளிமலை, மருதமலை, சேர்வராயன்மலை, இமயமலை முதலான மலைப் பாங்கு களுக்கு யாம் சென்ற காலங்களில் கண்டு, முன்னறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் இறும்பூதும் எய்தினோம். இத்தகைய பெருங்காடுகளைப் பாராதவர்களுக்கு, ஓரறிவு உயிர்களின் அமைப்பில் இறைவன் தோற்றுவித்திருக்கும் வனப்பும் உயர்ந்த காட்சியும் வியப்பும் பயனும் ஒரு சிறிதுமே விளங்கா.

கானகத்தின் கவினைக் கானகத்திலன்றி வெறெங்கும் காணல் இயலாது. எத்தனை வடிவான இலைகள்! எத்தனை நிறமான மலர்கள்! எத்தனை சுவையான காய்கள்! எத்தனை னிப்பான பழங்கள்! பழங்கள்! எத்தனை வகையான மரங்கள் செடிகள் கொடிகள்! அம்மம்ம! இறைவன் படைப்பின் பல்வேறு வகையான வியத்தகு அமைப்பும், அழகும் ஒருங்கு பொதுளிய அடவிகளின் விழுமிய தன்மையை எங்ஙனம் கூறுவேம்! எவ்வாறு காட்டுவேம்! கானகங்களின் அடர்ந் துயர்ந்த தோற்றத்தைக் காண்கையில் உள்ளமும் உணர்வும் மேலுயர்ந்து செல்கின்றன! வியப்பும் புதுமையும் கருத்தைக் கவர்ந்தெழுகின்றன!

அவை மட்டுமோ! நின்ற நிலையில் நிற்கும் மரஞ் செடி கொடிகளாகிய ஓரறிவுயிர்கள், இடம் விட்டுப் பெயரும் ஏனை உயிர்களுக்கு எத்தனை வகையிற் பயன்படுகின்றன! நீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/61&oldid=1584675" இலிருந்து மீள்விக்கப்பட்டது