உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

ல்

29

நிழலும் உணவும் தூய காற்றும் அவைகள் அனைத்துயிர்கட்கும் அளித்து வருகின்றன காண்மின்கள்! காடுகள் இல்லையாயின், வெய்யவன் சுடுகதிர்களால் வெதுப்பப்படும் இந்நிலம் நீர்ப்பசையற வறண்டு விடும்; ஆவியாக மாறி வானின்கண் சென்ற நீர் குளிர்காற்று வீசுதற்கு வழியின்மையால் திரும்ப மழையாகக் கீழ் இறங்காது. ஆகவே, உணவுப் பண்டங்களைத் தரும் மரம் செடி கொடிகளும் ஏனைப் பயிர்களும் உண்டாகா. இவ்வுண்மை, காடுகளை அழித்துவிடும் இடங்களில் மழை அருகிப் போதலால் நன்கு தெளியப்படும்.

உணவே அன்றி, நமதுயிர் வாழ்க்கைக்கு இன்றி யமையாத தூய காற்றும், காடுகளில் துவன்றிய மரஞ்செடி காடிகளினாலேயே நாம் வரப்பெறுகின்றோம். இவ்ஓரறி வுயிர்த்தொகுதிகள் மிகுந்தில்லாமல், ஏனை உயிர்த்தொகுதி களே எங்கும் மிகுந்திருக்குமாயின் வை வெளிவிடும்

உட்

நச்சுக்காற்றை இவ்வுயிர்களே மீண்டும் மீண்டும் கொண்டு, அதனால் நோய்ப்பட்டுச் சில சில நாட்களில் இறந்தொழியும். மற்றுக் கானகங்களிலும் பிற இடங்களிலும் உள்ள மரம் செடி கொடிகள் பயிர்களோ ஈரறிவு முதல் ஆறறிவு ஈறாக உடைய ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பனவாகிய சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலான இயங்குமுயிர்கள் வெளிவிடும் நச்சுக் காற்றை உள்ளிழுத்து, அதன் நச்சுத் தன்மையை நீக்கித் தூய காற்றை வெளிவிட்டு அதனை எங்கும் பரவச் செய்கின்றன. இவ்வுண்மை, பயிர் பச்சைகள் இல்லாத நகரங்களில் இருப்பவர்கள் அடுத்தடுத்து நோய்களாற் பற்றப்பட்டு விரைவில் மாய்ந்து போதலாலும், மரம்செடி கொடிகள் நிறைந்த நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நோயில்லா யாக்கையினராய் நீண்டகாலம் நன்கு உயிர் வாழ்தலாலும் இனிதறியப்படும்.

இனி, உலகத்திலே மிகப்பெரிய காடுகள், வடஅமெரிக்கப் பெருந்தேயத்தின் ஒரு பகுதியாகிய 'கனடா’ நாட்டின் கண்ணேதான் இருக்கின்றன. இங்குள்ள காடுகளின் அளவு முந்நூற்று எழுபத்தைந்து கோடி காணிகளாகுமென்று கணக்கெடுத்திருக்கிறார்கள். தென்னமெரிக்க தேயத்திலும், இத்துணைப் பெரிய காடுகள் இருந்தாலும், அவைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/62&oldid=1584676" இலிருந்து மீள்விக்கப்பட்டது