உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

  • மறைமலையம் -18

மரங்கள் மிக மிக அடர்ந்திருத்தலாலும், கொடிய காட்டு விலங்குகளும் நச்சுப் பெரும்பாம்புகளும் மிகுந்திருத்த லாலும் அவற்றினுள்ளே மக்கள் நுழைந்து சென்று பார்த் தலும் அவற்றை அளவெடுத்தலும் இயலவில்லையென்று ஆராய்ந்துபோய்க் காணும் ஆசிரியர்கள் அறிவிக்கின்றார்கள். ஐரோப்பியப் பெருந்தேயத்தின் வடபகுதியில் உளதாகிய உருசியா தேயத்திலும் மிகப்பெரிய காடுகள் இருக்கின்றன என்றும், அவற்றின் அளவும் சிறிதேறக்குறைய முந்நூற் றெழுபத்து ஐந்து கோடி காணிகளாகுமென்றும் இத் துறையில் வல்ல அறிஞர் கணக்கெடுத்துரைக்கின்றனர்.

இனி உயரத்திலும் பருமனிலும் குறைந்த அளவினவான மரங்கள் நிறைந்த குறுங்காடுகள் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. திருமறைக் காட்டிற்கும் கோடியக்கரைக்கும் இடையிலுள்ள காட்டைக் குறுங்காடு என்றே கூறுதல் வேண்டும். இராமேசுவரத்திற்கும் பாம்பனுக்கும் இடையிலுள்ள காடும் குறுங்காடேயாகும். திருச்செந்தூரையடுத்த நெய்தல் நிலப் பகுதிகளிலுள்ள

பனங்காடு உடைவேலங்காடுகளும் குறுங்காட்டில் சேர்ந் தனவேயாகும்.

L

னிச், சிறு தூறுகளும் குறுஞ்செடிகளும் பம்பிய காடுகளும் உண்டு. யாமிருக்கும் இப்பல்லவபுரத்திற்கு அருகில் தூறுகளும் சிறு செடிகளும் நிறைந்த ஒரு நீண் டகன்ற காடு உளது. ன்னோரன்ன சிறு காடுகள், மேற்கூறிய பெருங்குறுங் காடுகளைப் போல் காட்சிக்கு இனியனவாய் இல்லாவிடினும், நிலத்தின் வறட்சியைத் தணித்து, ஏழை எளியோர்கள் விறகுவெட்டி விற்றுப் பிழைப்பதற்குப் பெரிதும் உதவியாகின்றன.

இனி, மிக முதிர்ந்து முற்றிப்போனமையால் அடர்ந் தில்லாமல் அலைசலாயிருக்கும் இலைகளையும், அவ் விலைகள் தாமும் இல்லாமல் வெறுங்கோடுகள் கொம்பு களையும் உடைய பெரிய மரங்கள் நிறைந்த காட்டின் பகுதிகளைக் கோயம்புத்தூர்க்கடுத்த வெள்ளிமலைப் பெருங்காட்டின் இடையிடையே கண்டு வந்தோம். தழைந்த பசியமரத் தொகுதிகளைக் கண்டுகளித்த கண்களுக்கு, வற்றலாய் நிற்கும் இம்மரங்களின் தோற்றம் வருத்தத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/63&oldid=1584677" இலிருந்து மீள்விக்கப்பட்டது