உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

31

விளைவித்தது. செல்வத்தின் செழுமையால் கிளைஞரும் நண்பரும் சூழ வாழ்ந்து வந்தவர் ஒரு சிலர் சிறிது காலத்தில் அச்செல்வத்தை யிழந்து, சுற்றத்தார் எவருமின்றி, உடம்பின் ஒளியும் உள்ளக் கிளர்ச்சியும் அற்றுத் தனிநிற்றல் போலவும், இளமையும் அழகும் துலங்கத் தலைமையில் வீறி நின்றார், பிறர் சிலர் அவ்விளமையும் அழகும் தலைமையும் மாறி வற்றிய யாக்கையினராய் வருந்தி நிற்றல் போலவும், பச்சென்ற பொதுளிய இளந்தழைகள் உதிர்ந்து புட்களும் அவ்விலங் கினங்களும் அணுகப் பெறாமல் நீர்ப்பசையற்று வளார்களாகிய பழுத்த தலைமயிர்கள் காற்றில் அலையக் கோடுகளாகிய கைகளை நீட்டி விரித்துத் தமது வாட்டத்தைக் குறிப்பவனவாய்க் காணப்பட்ட அம்மரங்களின் தோற்றம், உயர்நிலை விரைவில் மாறப்பெறும் மக்களின் இவ்வுலகவாழ்வின் நிலைமையைக் குறிப்பதொன்றாகவே எமக்குத் தோன்றியது.

இனிக், கரிந்த மரங்களையுடைய பொச்சைக்காடுகள் கதிரவன் வெப்பத்தால் கனன்று கொண்டிருக்கும் மணல் வளிகளாகிய பாலை நிலங்களிலேதாம் அருமையாய்க் காணப்படும்.

இனி, முதலிற் கூறிய பெருங்காடுகளெல்லாம், பெரும் பாலும் ஆங்காங்கு அரசு செலுத்தும் அரசர்களின் காவலில் வைக்கப்பட்டு, அவர்கட்குப் பல வகையில் ஏராளமான வருவாயைத் தந்து வருகின்றன. காடுகளில் மிகுதியாக வளரும் தேக்கு, பாலை, முதிரை, ஆச்சா முதலான மரங்கள் வீடுகள், தொழிற்சாலைகள், கப்பல்கள், படகுகள் முதலியன அமைப்ப தற்கேற்ற வலிவுவாய்ந்து நீண்டகாலம் கெடாதிருப்பன வாதலால், அவற்றால் அரசர்கட்கு வரும் வருவாய் மிக்க அளவினது. மேல்பால் உள்ள சாலடி நாட்டில் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற்சிறந்து விளங்கிய அரசர்கள் அமைத்த பெரிய கோயில்களும் அரண் மனைகளும், நமது தமிழ்நாட்டின் மேல்கரைமலைகளில் வளரா நின்ற தேக்கு மரங்களைக் கொண்டே கட்டப்பட்ட பான்மையினைப் பழைய வரலாற்று நூலாசிரியர்கள் கண் டறிந்திருக்கின்றனர். இம்மரங்களேயன்றி அகில் சந்தனம் முதலான மணம் கமழ் மரங்களும், விலையுயர்ந்த யானை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/64&oldid=1584678" இலிருந்து மீள்விக்கப்பட்டது