உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

33

5. மருதம் - விளைநிலம்

நெற்பயிர் விளையாநின்ற வயல்நிலத்தையும் வயல் சூழ்ந்த இடத்தையும் ‘மருதம்' என்று தமிழ்நூலார் பண்டை க் காலந்தொட்டு வழங்கி வருகின்றனர். பழைய காலத்தில் நெற் பயிரிடுதற்கேற்றவைகளாகத் திருத்தப்பட்ட நிலங்கள், நிலங்கள், மருத மரங்களின் அருகேயிருந்தமையாற்போலும், அவற்றிற்கு மருத நிலம் என அவர் பெயர் அமைத்தனர். வயல்நிலத்தைப் ‘பண்ணை', ‘பணை’, ‘செய்’, ‘செறு’, ‘கழனி’, ‘பழனம்', விளையுள்', 'புலம்', 'வரப்புள்' என்னும் பல சொற்களால் தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.

பழைய நாட்களில் மாந்தரின் தொகை பெருகப் பெருக, அவர்களுக்கு வேண்டிய அளவு உணவுப் பண்டங்கள் மலை களிலும், கடல்களிலும், காடுகளிலும் கிடைப்பது அரிதாயிற்று. மலைகளிலும், காடுகளிலும் உள்ள கனிகள், வித்துக்கள், கிழங்குகளையும் மான், மரை, கடம்பை, ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளையும் கடல்களிலுள்ள மீன்களையும் தின்று வந்த மிகப் பழைய முன்னோர்கள், தமது தொகை பெருகப் பெருக அவை போதாமை கண்டு, ஆடு மாடுகளை மிகுதியாக வளர்த்து அவற்றின் பயன்களான நெய், பால், தயிர் முதலியவை களையும் காடுகளில் ஆங்காங்கு இயற்கையாக வளர்ந்து கிடந்த அவரை, துவரை, மொச்சை, காராமணி, உழுந்து, பயறு, கடலை, எள்ளு முதலான பண்டங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். காலஞ் செல்லச் செல்ல அவர்களின் தொகை பின்னும் பின்னும் பெருகலானமையின், இயற்கையில் கிடைத்த இத்தனை உணவுப் பண்டங்களும் அவர்கட்குப் போதா ஆயின. இதற்கென் செய்வது என்று, அவர்களுள் அறிவால் மிக்க சிலர் எண்ணிப் பார்க்கப் பார்க்க, இயற்கையாக வளரும் கூலங்களின் வித்துக்களை மட்டும் எடுத்து, வேறு மரஞ்செடிகொடிகள் இல்லாத வெளி நிலங்களைக் கீறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/66&oldid=1584680" இலிருந்து மீள்விக்கப்பட்டது