உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 18

அவற்றுள் விதைத்தால், அவை மிகுதியான விளைச்சலைத் தரு மெனக் கண்டறிந்தார்கள். அறிந்தபின் அறிஞர்களும் அவரது ஏவல்வழி நின்றவர்களும் வெட்ட வெளியாகக்கிடந்த நிலங்களைக் கோல்களாலும், குந்தாலிகளாலும் கிளறிக் கொத்தி அவற்றின்கண் அவ்விதைகளை இட, அவை வேண்டிய இ அளவு வெயிலும் மழையும் பெற்று, வேறு மரஞ்செடி கொடிகளின் இடைஞ்சல் இல்லாமையின், ஒன்று நூறாகப் பயன்தரலாயின.

இங்ஙனம் முதன்முதல் செயற்கைப் பயிர் செய்வதற்கு வெளி நிலங்களே பயன்பட்டமையின், அவை ‘வயல்’, ‘புலம்’ என்று பெயர் பெறலாயின. வயல் என்னும் சொல்லுக்கு முதற்பொருள் வெளியென்பது ஆகும். புலம் என்னும் சொல்லும் எவை தம்மாலும் மறைக்கப்படாமல் கண் ணுக்குப் புலப்பட்டுக் கிடக்கும் வெளியிடத்தையே உணர்த் தும். மேலும், இயற்கையில் வறிதாய்க் கிடந்த வெளிநிலம் அறிவர் சிலரால் முதன்முதல் கிண்டிக் கிளறிப் பயிர் செய்வதற்கு ஏற்றபடியாகச் செய்யப்பட்டமையின் பின்னர் அது 'செய்' என்றும், பண்ணப்பட்டமையின் ‘பண்ணை', ‘பணை’ என்றும் செறப்பட்டமையின் அதாவது கீறப்பட்டமை யின் 'செறு' என்றும் வழங்கப்படலாயிற்று.

இவ்வாறு முதலில் தொடங்கிய பயிர்த்தொழிலைச் செய்யச் செய்ய, மேலும்மேலும் அதனைத் திறமாகச் செய்யும் வழி வகைகளை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வல்லென்று கெட்டியாயிருக்கும் நிலத்தில் மென்பதத்தவான நெல்லும், ஏனை மணிகளும் வேர் ஊன்ற மாட்டாமல் பட்டுப் போதல் கண்டு வன்பாலான நிலத்தை மென்பாலாக்கும் முறை கண்டு கொண்டார்கள். நிலத்தைக் கிளறி அதற்குத் தண்ணீர் பாய்ச்சினால் மண்ணும் தண்ணீரும் கலந்து அது மென்பதப் படுதல் அறிந்தனர். இங்ஙனம் கிளறுதலாலும் தண்ணீர் பாய்ச்சுதலாலும் இறுகிய மண் கழன்று நிலம் மென் பதம் அடைதலின், அங்ஙனம் கழன்ற வயல்நிலம் எனப்பட்டது.

கழனி’

அதன்மேல், பயன்படுத்தப்பட்ட அக்கழனியில் வித்திய நெல் ஒன்று பல்லாயிரமாய் பயன் தந்ததாகலின் பின்னர் அது ‘பழனம்’, ‘விளையுள்' எனப் பெயர் பெறலாயிற்று. பயன், பழம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/67&oldid=1584681" இலிருந்து மீள்விக்கப்பட்டது