உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

35

பழன், விளைவு முதலியன எல்லாம் ஒரே பொருளைத் தரும் சொற்களாகும்.

அங்ஙனம் விளைந்த நிலம் முதலில் பலர்க்கும் பொது வாயிருந்ததனால், அதன் விளைவை அவரெல்லாரும் தத்தமக்கு வேண்டிய அளவு பங்கிட்டுக் கொண்டு வைத்து வாழ்ந்தார்கள். பிறகு நாள் செல்லச் செல்ல, நன்றாக உழைத்துப் பாடுபடுபவர்களும், பாடுபடாமல் சோம்ப லுற்று இருப்பவர்களும் விளைந்த பொருள்களைத் தாம்தாம் வேண்டும் மட்டும் எடுத்துக் கொள்ள விடுதல் முறை யாகாதென்று உணர்ந்தனர். உணர்ந்து அவரவர் எவ்வளவு பாடுபடக் கூடுமோ அவ்வளவு பாட்டுக்குத்தக்க நிலத்தை அளந்து வரம்பு கட்டி அவரவர்க்குப் பங்கிட்டுக் கொடுத் தனர். முதலில் பலர்க்குப் பொதுவாய்க் கிடந்த நிலப்பரப்பு பின்பு ஒவ்வொருவர்க்கோ அல்லது ஒவ்வொரு குடியினர்க்கோ உரியவாம் பல பகுதிகளாகப் பங்கிடப்பட்டு இடையிடையே வரம்பு உயர்த்தப்பட்டமையின், அவ்வாறு வரம்புக்கு உள்ளடங்கிய வயல்கள் 'வரப்புள்' என்று வழங்கப்படுவ வாயின. 'வரம்பு' என்பது வரப்பு என வலித்தது. இவ்வாறாகத் தமிழில் வயல் நிலத்திற்கு வழங்கும் பல சொற்களையும் ஆராயவே, பண்டைக் காலத்திருந்த தமிழ் முதுமக்கள் முதன்முதல் பயிர்த்தொழில் எவ்வாறு செய்ய அறிந்து, அதனை எவ்வாறு செய்து, எவ்வாறு பயன்படுத்தி இன்று காறும் வாழ்ந்து வருகின்றனர் என்னும் வரலாறு நன்கு விளங்குதல் கண்டுகொள்க.

.

இனித் தொன்றுதொட்டுப் பயிர்த்தொழிலைப் பெருக்கி வாழும் உழவு வாழ்க்கை, தமிழ் மக்களிடம் மிகுந்து காணப் படுதல் போல், உலகத்திலுள்ள வேறு எந்த மக்களிடத்தும் மிகுந்து காணப்படவில்லை. மற்றை மாந்தர்கள் தத்தம் நாடுகளில் சிற்சில பகுதிகளிலேதாம் உழவுத் தொழிலை நடத்தி வரக் காண்கின்றோம். மற்றும் தமிழ்மக்களோ தாம் உறையும் இத்தென்னாடு முழுதும் நெற்பயிரும், பிறபயிரும் விளைத்து இனிது வாழ்ந்து வருகின்றனர். இத்தமிழ்நாட்டின் வடஎல்லையாகிய திருவேங்கடமலையிலிருந்து, தென்கோடி யாகிய குமரிமுனை வரையிலும் வரையிலும் கீழ்கரை, மேல்கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/68&oldid=1584682" இலிருந்து மீள்விக்கப்பட்டது