உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் 18

வரையிலும் எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் நெல் வயல்களே நிறைந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்னென்றால், தமிழ் நாட்டின்கண் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்வாய்களும் மிகுந் திருத்தலே ஆகும்; வேறு நாடுகளிலோ அவை அங்ஙனம் மிகுந்திருக்கவில்லை. வடபெண்ணை, பாலாறு, தென்

தன்

பண்ணை, காவிரி, வைகை, பொருநை, நெய்யாறு முதலியன நீர்நிரம்பி ஓடுதலும், இவற்றால் நீர் ததும்பிப் பொலியுங் குளங்களும் தாமரைவாவிகளும் பெரிய பெரிய ஏரிகளும், அவற்றிலுள்ள நீரைக் கொண்டு சென்று கோடிக் கணக்கான வயல்களை ஊட்டும் கால்வாய்களும் இத்தென்னாட்டின்கண் அடுத்தடுத்துக் காணப்படுதல் போல வேறெங்கும் காணப் படுதல் இல்லை. சோழ நாட்டிற்கு ஓர் உயிராய் நின்று நிலவும் காவிரியாறு, நெடுந் தொலைவிலுள்ள மேற்கரை மலை களிலிருந்து திரட்டிக் கொணரும் வண்டல்கள் இந்நாட்டின் வயல்களிலும் படுகைகளிலும் படிந்து நிலத்தை மிகவும் சழுமையுறச் செய்கின்றன. பாண்டிநாட்டில் ஓடும் வைகை, பொருநை முதலான ஆறுகளும், காவிரியாற்றிற்கு அடுத்த படியாக அந்நாட்டின் மருதநிலங்களை வளப்படுத்தும் தன்மையனவாகவே இருக்கின்றன. இங்ஙனமாக த் தன்னாட்டின் இயற்கை அமைப்புப் பயிர்த் தொழிலுக்குப் ெ ரிதும் ஏற்ற பல நலங்களும் பொருந்தி இருத்தலால், எத்தனையோ ஆயிர ஆண்டுகளாக இதன்கண் உயிர்வாழும் தமிழ்மக்கள் அத்தொழிலைச் செவ்வையாக நடத்திக்கொண்டு இனிது காலம் கழித்து வருகின்றனர்.

-

இன்னும், இத்தென்நாட்டின்கண் உள்ள மருத நிலங் களில் நெற்பயிர் மட்டுமே அன்றித் தென்னஞ் சோலை களும், மாந்தோப்புகளும், கமுகந் தோட்டம் வாழைத் தோட்டங்களும், எலுமிச்சை, நார்த்தை, பலா, கரும்பு முதலியன செழித்திருக்கும் தோட்டக் கால்களும், இஞ்சி, மஞ்சள், மிளகாய், சேம்பு, கருனை முதலியன வளர்ந்திருக்கும் கொல்லைகளும், கண்ணையும், கருத்தையும் கவரும் வனப்பும், பயனும் மிக்கனவாய் ஆங்காங்கு அடர்ந்து காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/69&oldid=1584683" இலிருந்து மீள்விக்கப்பட்டது