உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

37

உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இத்தனை உணவுப் பண்டங்களும் எளிதிலே விளைத்துக் கொள்ளுதற்கேற்ற வசதிகள் இயற்கையே அமையப்பெற்ற இத்தென்னாட்ட வர்கள், தமக்குச் சிறப்பாக உரிய உழவுத் தொழிலை மேன்மேற் செவ்வையாகச் செய்து வருவார்களானால், அவர்கள் ஏனைநாட்டு மக்களைச் சார்ந்து பிழைக்க வேண்டியதிராது. மற்றைத் தொழில்களைச் செய்யும் மற்றை நாட்டவர்களே இத்தென்னாட்டவர் உதவியை எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டியவராவர்.

“சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.”

(திருக்குறள் 1031)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/70&oldid=1584684" இலிருந்து மீள்விக்கப்பட்டது