உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் -18

6. நெய்தல்-கடல்

பழைய தமிழ் நூல்களில் கடலையும் கடல் சார்ந்த நிலத்தையும் ‘நெய்தல்' என்று அறிவுடையோர் வழங்கி யிருக்கின்றனர். கடல் என்னும் சொல் கட்பார்வையினைக் கட ந்து நிற்பது என்னும் பொருளைத் தரும். கடலினது எல்லை அதனை நோக்குவாரது கண்ணுக்குப் புலனாகாமையின், அஃது அங்ஙனம் பெயர் பெறலாயிற்று.

இனிக், கடலானது எந்நேரமும் பேர் இரைச்சல் டுவது பற்றி ‘ஆர்கலி”, “நரலை’, ‘குரலை', ‘அழுவம்' என்றும், பரந்திருப்பது பற்றிப் 'பரவை' என்றும், ஆழ்ந்திருப்பது பற்றி 'ஆழி' என்றும், உப்புநீர் உடைமை பற்றி ‘அளக்கர்’ ‘பௌவம்’ ‘உவரி' என்றும், மழை முகிலை உண்டாக்குதல் பற்றிக் கார்கோள்' என்றும், மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மூன்றுக்கும் காரணமாதல் பற்றி 'முந்நீர்' என்றும் பல சொற்களால் வழங்கப்படுகின்றது.

கடற்காட்சியினைக் காணல்வேண்டினால் சென்னை, நாகை, திருச்செந்தூர், தென்குமரி முதலான பட்டினங்களில் கடற்கரையோரங்களில் சென்றிருந்து காணல் வேண்டும். விடியற்காலையில் ஞாயிறு கிழக்கே தளதளவென்று எழும்போது உண்டாகும் கடலின் தோற்றம் பெரிதும் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய்ப் பொலிகின்றது. பகலவன் எழுவதற்கு முன் நீலநிறமாயிருந்த ஆர்கலியின் நீர்ப்பரப்பு அவனது ஒளிபாய்ந்த அளவில் பச்சென்ற நிறமுடையதாக மாறி மிளிர்கின்றது; ஞாயிற்றின் கதிர்கள் அதன்மேல் துள்ளுவது போல் காணப்படுகின்றன. கடலின் பரப்பும் கீழ்பால் வானும் ஒரு பெருவிளக்கமுடையதாய்த் திகழ, அவை இரண்டன் ஓரங்களும் பொருந்தும் இடத்தே கதிரவன் நெருப்புத் திரளைப் போல் தோன்றும் காட்சி இவ்வுலகமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/71&oldid=1584685" இலிருந்து மீள்விக்கப்பட்டது