உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் -18

கண்டு வியந்த வண்ணமாய்ச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தி எட்டி நோக்கத் தொலைவிலுள்ள பௌவத்தின் பரப்பு வரவர மங்கலாய் இருளோ எனத் தோன்றியது! அருகில் காணப்படும் நிலவொளிப் பரப்பிலிருந்து, தொலைவில் தோன்றும் இருள்மிகு பரப்பினுட் கப்பல் தனியே விரைந்து செல்லும் செலவினைக் கண்டு எமதுள்ளத்தே முன்னறியாத ஒரு நடுக்கம் தோன்றியது!

யாம் ஏறியிருந்த அக்கப்பலின் தனிமையையும், அத னுள்ளிருக்கும் எமது தனிமையையும் நினைத்து, அந் நேரத்தில் எல்லாம் வல்ல ஆண்டவன் துணையை அன்றி வேறேதும் இல்லாமை கண் எமது நெஞ்சம் நெக் குருகியது! கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் எவரேனும் கப்பலேறிச் செல்வராயின், அவர்க்குக் கடவுள் நம்பிக்கை தானே உண்டாகுமென அப்போது நன்கு உணர்ந்தோம். ஆராய்ச்சியும் அறிவும் இல்லாமல் விலங்கினங்களைப் போல் கப்பலேறிக் கடல் கடப்பாரைப் பற்றி இங்கே நினைக்க வேண்டுவதில்லை. ஆராய்ச்சியும் அறிவும் உணர்வெழுச்சியும் உடையாரே மரக்கலச் செலவால் அறிவும் இன்பமும் கடவுள் நம்பிக்கையும் எய்துவர் என்றுணர்தல் வேண்டும்.

.

ன்னும், கடலுக்கு அருகிலுள்ள ஓர் உயர்ந்த மலை மேலேறிக் கடற்பரப்பினையும், அதனையடுத்த துறைமுகப் பட்டினத்தையும் நோக்குவார்க்கு, இறைவன் வகுத்த இயற்கைக் கடலமைப்பும், மக்கள் வகுத்த ஒரு பட்டினத் துறை முகச் செயற்கை அமைப்பும் ஒருங்கு இணைந்து, ஒருபெரும் புதிய காட்சியினைப் பயந்து, அவரது உள்ளத்தினை இன்னும் ஆழ்ந்த நினைவிலே புகுத்தா நிற்கும். இறைவன் வகுத்த இயற்கையமைப்புகள் எங்ஙனம் அழகும் பயனும் வாய்ந்து திகழ்கின்றனவோ, அங்ஙனமே மக்கள் எழுப்பிய உயர்ந்த மாட மாளிகைகளும் தொழில் நிலையங்களும் அவை தம்முள் பலவற்றின் கொடுமுடிகளும் காட்சிக்கினியவாய்ப் பயன்சிறந்து திகழா நிற்கின்றன. இதனை எண்ணிப் பார்க்கையில் மக்களின் அறிவும், முயற்சியும் கடவுளின் அறிவு முயற்சிக்கு ஒரு புடை ஒத்த தெய்வத்தன்மை வாய்ந்தனவாகவே தோன்றுகின்றன. இயற்கைப் பொருளியக்கங்கள் ஒரோவொருகால் மக்களின் அறிவு முயற்சியைச் சீர்குலைத்துச் சிதைப்பனவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/73&oldid=1584687" இலிருந்து மீள்விக்கப்பட்டது