உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

41

இருப்பினும், அவற்றிற்கு அஞ்சித் தமது முயற்சியைக் கை சோரவிட்டு அறிவு குன்றிப் போகாமல், அவர்கள் மேன்மேல் அறிவு மிகப் பெற்று அதனால் அரியபெரிய முயற்சிகள் செய்து அவற்றொடு போராடி வெற்றி கொண்டு நிற்கும் பேராண்மை, மலைமேலிருந்து இவ்விரு வேறு அமைப்புகளையும் நோக்கு தலால் நம் கட்புலனெதிரே நன்கு விளங்கா நிற்கின்றது. அங்கும் இங்குமாய் அலையும் கடலின் எதிரே உயர்நிலை மாடங்களும் தொழில் நிலையங்களும் அலைவின்றி வீறி நிற்கும் காட்சி அறிவுடை மக்களின் அசையா உள்ளப் பான்மையினை

அறிவிக்கின்றதன்றோ?

னிக், கடலின் பரப்பு, இந்நிலத்தின் பரப்பைவிட மும்மடங்கு பெரியதாயிருக்கின்றது. ஆனதனால்தான் தமிழ் மக்கள் அதனைப் 'பரவை' என்று வழங்கி வருகின்றனர். நிலத்தைவிட நீரின் அளவு இத்துணை மிகுதியாய் இருக்க வேண்டுவது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், நிலம் வன் பொருளாயும், நீர் மென் பொருளாயும் இருத்தலினாலும், நிலத்தின்கண் பயிராகும் பயிர் பச்சைகள் பச்சைகள் முதல் சிற் றுயிர்கள் பறவைகள் விலங்குகள் மக்கள் ஈறான எண்ணிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் கடலின்கண் உயிர் வாழும் அளவிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கு மெல்லாம் நீரின் உதவியே இன்றியமையாததாய் இருத்த லினாலும், நிலமானது தன்னளவில் மாறாமல் நிற்க நீரானது நிலத்தினுள் சுவறுவதோடு மீண்டும் மழையாய் இறங்குவதற்கு ஆவியாக மாறி வானின்கண் முகிலாய் மு உலவவேண்டி யிருத்தலினாலும், நிலத்தை வளமுடையதாக்கி உயிர்களைப் பல்கச் செய்யும் நீர், நிலத்தினும் மிகுந்த அளவினதாக இறைவனால் அமைத்து வைக்கப்பட்டதென்றும் உணர்தல் வேண்டும்.

இனிக், கடலைவிட ஆழத்தின் மிக்கதொரு நீர்நிலை எங்கும் இல்லாமையால், 'ஆழி' என்னும் பெயர் கடலுக்குரிய தொன்றாகப் பண்டுதொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. நமது இவ்விந்திய நாட்டை அடுத்திருக்கும் 'இந்தியமாக்கடல்’ பெரும்பான்மையான இடங்களில் பன்னீராயிர அடி சிறிதேறக்குறைய இரண்டேகால் மைல் ஆழமுடையதாக இருக்கின்றது; மற்றும் சிற்சில இடங்களில் அஃது இரண்டே

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/74&oldid=1584688" இலிருந்து மீள்விக்கப்பட்டது