உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கால்

மறைமலையம் -18

மைலுக்கு மேல் மேல் நாலே

கால் மைல்

ஆழமுடையதாக ஆராய்ந்தறியப்பட்டிருக்கின்றது.

வரையில்

சாவகத் தீவுக்குச் (Java) தென்னண்டையிலுள்ள கடற் பகுதியோ நாலேகால் மைல் ஆழமுடைய தொன்றாக ஆராய்ச்சி வல்ல ஆசிரியரால் அளந்து காணப்பட்டிருக் கின்றது. இனி, இவ்விந்திய மாக்கடலினும் ஆழமுடையது 'ஆட்டுலாந்திகு' மாக்கடலேயாம்; தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலேயுள்ள மேல் இந்தியத் தீவுகளின் வடக்கே நிற்கும் இம்மாக்கடற் பகுதியின் ஆழம் சிறிதேறக்குறைய நாலேகால் மைல் ஆகும். இனி, இப்பெருங் கடலினும் ஆழம் வாய்ந்தது ‘அமைவுப் பெருங்கடலே' ஆகும். இஃது அமெரிக்கப் பெருந்தேயத்திற்கும், ஆசியா ஆஸ்திரேலியப் பெருந் தேயங்கட்கும் இடையிலே நிற்கின்றது. இது சிற்சில இடங்களில் ஐந்து மைல் ஆறு மைல் ஆழமும் வாய்ந்த தொன்றாக அளந்தறியப்பட்டுள்ளது. இன்னும் இஃது எவ்வளவு மிகுதியான ஆழமுடையது என்பதனை முற்றும் அளந்து காண்டல் இயலாததாய் இருக்கின்றதென ஆராய்ச்சி வல்ல ஆசிரியர் நுவல்கின்றனர். எனவே, இந்நிலவுலகத்தைச் சூழ்ந்த பேராழியின் ஆழம் ஆறுமைல் வரையில் செல்வ தன்பது நன்கறியப்பட்டிருத்தலால், அக்காரணம் பற்றி அதனை ‘ஆழி'யென வழங்குவது பெரிதும் பொருத்த முடையதாதல் காண்க.

இனிக், கடலின்கண் உள்ள நீர் உப்பாயிருத்தல் ஏன் என்றறிய அறிஞர் சிலர்க்கு அவா எழும். கடலுக்கு மிக அருகில் உள்ள சில கிணறுகளில் தீஞ்சுவைத் தண்ணீர் கிடை கிடைப்ப தாயிருக்க, அவற்றையடுத்திருக்கும் கடலில் மட்டும் உப்பு மிகுந் திருத்தல் வியக்கத் தக்கதன்றோ? இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்னையென்று ஆராய்ந்து பார்த்தால், கடலின் நீர் மேல்நீராயிருப்பதும், அதனையடுத்துள்ள நல்ல கிணற்றுநீர் கீழ்நீராயிருப்பதுமேயாம் என்பது புலனாகும். நிலத்தின் பல பகுதிகளிலும் மலைகள் மேலும் பெய்த மழை நீர் ஆங்காங்கு பலவகை உப்புகளையும் கரைத்தெடுத்து ஆறுகளின் வழியே கொணர்ந்து கடலின்கட் சேர்த்துவிடுகின்றது; விடவே கடல் மேல் நிற்கும் நீர் உப்புடையதாகின்றது. மற்றுக் கடலடுத்த கிணற்று நீரோ கிணற்றின் அடிப்படையிலிருந்து மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/75&oldid=1584689" இலிருந்து மீள்விக்கப்பட்டது