உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

43

சுரப்பது; அவ்வடிப்படையிலுள்ள நிலம் உப்பில்லாததாயின் அதன்கட் சுவறிய மழைநீரும் தூயதாய் இன்சுவை மிகுந்து பருகுவதற்குப் பயன்படுவதாய் நிற்கும். அவ்விருவகை நீரும் வேறுபடுவதற்குக் காரணம் இவையேயாதல் கண்டு கொள்க. கடல் நீரில் எழுவகையுப்புகள் கரைந்து கலந்திருக்கின்றன என்று அறிஞர்கள் பகுத்துணர்ந்திருக்கின்றார்கள். இங்ஙனமாகக் கடல் உப்பு நீர் உடையதாதல் பற்றி அஃது 'உவரி' என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறெல்லாம் தமிழ் மக்கள் பண்டுதொட்டுக் கடலுக்கு வழங்கிவரும் பல பெயர் களைக் கொண்டு, அவர்கள் இவ்வையம் சூழ்ந்த கடலின் இயற்கைத் தன்மைகள் பலவும் நன்கு ஆராய்ந்துணர்ந் தவர்களாதல் தெளிந்து கொள்ளப்படுமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/76&oldid=1584690" இலிருந்து மீள்விக்கப்பட்டது